0
Posted Image
 தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 684 வாக்கு சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.


Posted Image
வாக்குப்பதிவை வீடியோவில் பார்வையிட விரும்புவோர், முதலில் வெப்சைட்டில் பெயர், தொலைபேசி எண்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம் வெப்சைட்டில் வாக்குப்பதிவை பார்வையிடலாம். இந்த வசதி நாளை காலை 7 மணி முதல் கிடைக்கும். மேலும், ஒரு பார்வையாளர் 10 நிமிடங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவை பார்வையிட முடியும். அதன்பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் பார்வையிட புதிதாக லாக் இன் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Note; இந்த live portal லிங்க் 24-04-14 காலை 7 மணி முதல் மட்டுமே கிடைக்கும்

Live Portal : http://public.gelsws.in/

Note: The portal would be available for access from 07:00 AM on 24/04/14.

கருத்துரையிடுக Disqus

 
Top