0
இணையத்தில் OpenSSL cryptographic software library என்பதில் SSL/TLS encryption  ஐப் பயன்படுத்தி தகவல்கள் பாதுகாக்கப் படுகிறது.இதில் விழுந்த ஓட்டை-Bug- காரணமாக இணையத்தில் இருந்து, server உட்பட, தகவல்களை யாரும் எடுத்துக் கொள்ள முடியும்.

இது ஒரு வைரஸ்-மால்வெயர் அல்ல. ஒரு ஓட்டை அல்லது குறைபாடுதான். இதனால் பல இணையப் பக்கங்கள் பாதுகாப்பிழந்து காணப்படுகிறது.

ஒரு இணையப் பக்கம் பாதுகாப்பானதா என்று அறிய பிரவுசரில் இணைப்பொன்றைப் பயன்படுத்தலாம். ஒரு இணையப் பக்கத்திற்கு செல்லும் போது மேல் மூலையில் உள்ள இதயம் போன்ற ஐகன் , தன் நிறத்தை(WOT இல் உள்ளது போல்) மாற்றிக் கொள்ளும். பாதுகாப்பான பக்கமாக இருந்தால் பச்சை நிறத்திலும்,ஆபத்தான பக்கமாக இருந்தால் சிவப்பு நிறத்திலும் மாறும். சில பக்கங்கள் மஞ்சல் நிறத்தில் இருந்தால் அது பாதுகாப்பற்றது என்று முடிவு செய்ய முடியாது.

சில நல்ல பக்கங்கள் கூட மஞ்சல் நிறத்தில் வருவதைக் காண முடிகிறது. முக்கியமாக சிவப்பு நிறத்தில் வருவதை பாதுகாப்பற்றது எனக் கொள்ளலாம்.

எல்லாம் 100 சதவீதம் சரியாக இயங்கும் எனச் சொல்ல முடியாது என்பதையும் கவனத்தில்  கொள்ள வேண்டும்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/heartbleed-checker/

https://chrome.google.com/webstore/detail/chromebleed/eeoekjnjgppnaegdjbcafdggilajhpic/related

கருத்துரையிடுக Disqus

 
Top