0
மொபைல் சாதனங்களில் உடனுடக்குடன் செய்திகளை அனுப்புவதில் உலகெங்கும் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ் அப்’ தற்போது குற்றங்களுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் ஆயுதமாகவும் மாறியுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளை உடனடியாக பரிமாற்றம் செய்துக்கொள்ள உதவும் ‘வாட்ஸ் அப்’ மூலம் போலீஸ் மீதான புகார்களை தெரிவிக்க புதிய உதவி எண்ணை டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.


ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 9910641064 என்ற உதவி எண் அமலுக்கு வந்ததுள்ளது என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. உங்களுடைய புகார்களை மட்டும் இன்றி உங்களிடம் லஞ்சம் பெற்றவர்கள் வாய்ஸ் மெசேஜ் மற்றும் வீடியோவையும் இதில் அனுப்ப முடியும்.


‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய பதிவுகள் மூலமும் படம் பிடித்து ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்று டெல்லி போலீஸ் துணை ஆணையர் (லஞ்ச ஒழிப்பு பிரிவு) சிந்து பிள்ளை தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் யாராவது லஞ்சம் கேட்டாலோ, பொதுமக்களிடம் தவறாக நடந்து கொண்டாலோ அதனை ‘வாட்ஸ் அப்’ மூலம் படம் பிடித்து டெல்லி போலீசுக்கு அனுப்பி வைக்கலாம். எங்களுக்கு புகார்கள் வந்தால், முதலில் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் உண்மைத்தன்மை தடயவியல் அறிவியல் துறை உதவியுடன் சரிபார்க்கப்படும்.

உண்மை என்று தெரியவந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனே தற்காலிக பணி நீக்கமும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று சிந்து பிள்ளை தெரிவித்துள்ளார். டெல்லியில் ஏற்கனவே 1064 மற்றும் 1800111064 என இரண்டு உதவி தொலைபேசி எண்கள் உள்ளன. தற்போது, கூடுதலாக ‘வாட்ஸ் அப்’ மூலம் போலீஸ் மீதான புகார்களை தெரிவிக்க புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top