0
கரப்பான் பூச்சியை போலவே உருவம் கொண்ட குட்டி ரோபோ எந்திரத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. அதில் காமரா பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் ராணுவத்தினர், எதிரிகள் நடவடிக்கையை இந்த ரோபோவை வைத்து கண்காணிக்க முடியும்.

ரஷ்யா சமீப காலமாக, தன் ராணுவத்தில் பல வகையான ரோபோட்களை இணைத்த வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ளது – கரப்பான் பூச்சி ஸ்பை ரோபோ.


இப்படி ஒரு குட்டி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதை ரஷ்ய நாட்டு அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது. 7 மாத உழைப்பில் இம்மானுவேல், கன்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழகம் இதை உருவாக்கியுள்ளது.



4 இன்ச், அதாவது 10 சென்டிமீட்டர் நீளம் உள்ள இந்த ஸ்பை ரோபோ ஒரு நிஜ கரப்பான் பூச்சியை போலவே நகர்ந்து வேகமான ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சுமார் 6 சென்ரி மீற்றர் நீளம் கொண்ட இந்த கரப்பான் பூச்சி ரோபோ உலர்மின்கலத்தால் இயங்கும். 20 நிமிட நேரம் தொடர்ச்சியாக உலர்மின்கலத்தால் இயக்க முடியும். இதில் சிறு காமராவும் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த கரப்பான் ரோபோ ஸ்பை-யில் போட்டோசென்சிடிவ் சென்சார், மற்றும் தொடர்புகளை கண்டறியும் சென்சார் ஆகியவைகள் பொருத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எளிதில் நுழைய முடியாத இடங்களில் மிகவும் அசாதாரணமாக நுழைந்து உளவு பார்ப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்கள், இந்த ரோபோவை அனுப்பி எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். பார்க்க கரப்பான் பூச்சியை போலவே இருப்பதால், யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. மல்லாக்க போட்டாலும், நிஜ கரப்பான் பூச்சியை போலவே கால்களை ஆட்டியபடி உள்ளது இந்த ரோபோ.

ரஷ்ய என்ஜினீயர்களான டேனில் போர்சேவிகின் (Danil Borchevkin) மற்றும் அலெக்சேய் பேலோசெவ் (Aleksey Belousov) ஆகிய இருவரும் தான் இவ்வகை பயோனிக் கரப்பான் பூச்சிகளை உருவாக்கியுள்ளனர். 


கருத்துரையிடுக Disqus

 
Top