0

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா'  இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை விண்ணில் இருந்து பிரம்மாண்டமாக படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் நாசாவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் களத்தில் இருந்த விண்வெளி வீரர் ஒருவர் இந்த போட்டோவை எடுத்துள்ளார். இந்த போட்டோ 28 மில்லிமீட்டர் லென்ஸ் கொண்ட நிக்கான் D4 டிஜிட்டல் கேமிராவால் செப்டம்பர் 23-ந்தேதி  எடுக்கப்பட்டது.

பூமியில் மிகச்சில நாடுகளின் சர்வதேச எல்லைகள் மட்டுமே இரவு நேரங்களில் காணக்கூடும் என்பது இந்த போட்டோவால் தெரியவருகிறது. ஆரஞ்சு வண்ண விளக்குகளின் வெளிச்சத்தால் பரவியிருப்பது போன்ற பிரம்மாண்ட தோற்றம் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை காணப்பட்டது.

இதேபோன்று 2011-ல் இமாலயத்தின் தென்கிழக்கு எல்லையை நோக்கிய ஒரு பிரம்மாண்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top