0
 
முன்ஜென்ம நினைவு சார்ந்த அனுபவத்தை பிரபலமாக "தேஜா வூ" (Deja vu) என்று கூறுவர். அதாவது "தேஜா வூ" என்றால் பிரஞ்சு மொழியில் உளவியல் நிகழ்வை (psychological phenomenon) குறிப்பிடும் ஒரு வார்த்தையாகும்..!
எப்போது வேண்டுமானாலும், எந்த நொடி வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிகழும் இந்த உளவியல் நிகழ்வானதை உலகின் 70 சதவிகித மக்கள் அனுபவித்துள்ளார்கள் (பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுக்கூட சொல்லலாம்)..!

தேஜா வூ :
நம்மில் பெரும்பாலோனோர்கள் நம் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது "தேஜா வூ"-வை அனுபவித்து இருப்போம்..!


மர்மமான உணர்வு :
தேஜா வூ என்றால் - நிகழ்காலத்தில் நீங்கள் அனுபவிக்கும் ஒரு நிகழ்வை ஏற்கனவே மிக காலத்திற்கு முன்பு நடந்தது போலவே உணர்வீர்கள், மெதுவான இயக்கம் மூலம் கடந்துசெல்லும் ஒரு மர்மமான உணர்வு தான் தேஜா வூ..!


புரிதல்:
இந்த மர்மமான தேஜா வூ அனுபவத்திற்கு சிறிய அளவிலான புரிதல்களை தவிர்த்து, எந்தவிதமான ஆணித்தனமான அறிவியல் விளக்கமும் தற்போதுவரை கிடையாது..!


ஆராய்ச்சியாளர்கள் :
அமானுட தொந்தரவுகள் (paranormal disturbances), நரம்பியல் கோளாறுகள் (neurological disorders ), நம்முள் ஒன்றுசேர்ந்தே பிரபஞ்சங்கள் (multiple universes coexisting with ours) என தேஜா வூ அனுபவத்திற்கு பல காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வகுக்கின்றனர்.


மர்மமான சக்தி :
நீங்கள் ஒரு "தேஜா வூ" அனுபவத்திற்குள் தள்ளப்படும் போது, ஒரு மர்மமான முறையில் சுயநினைவை இழந்து உங்களை ஒரு மர்மமான சக்தி 'இது ஏற்கனவே நடந்த ஒரு நிகழ்வு' என்று உங்களை முன் செலுத்துவதை உணரலாம்.


நரம்பியல் மற்றும் சோதனை தெராபடிக்சின் :
டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் சோதனை தெராபடிக்சின் துறையின் ஆய்வின்படி , இந்த உளவியல் நிகழ்வானது பொது மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேருக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.


குழப்பமான அறிவியல் :
தனிப்பட்ட ஒரு பின்னோக்கிய அனுபவத்தை அளிக்கும் தேஜா வூ சார்ந்த தெளிவான அடையாளத்தை அளிக்க கூடிய விடயத்தை ஆய்வகத்தில் நிகழ்த்தி பார்க்கவே முடியாது என்பதால் தான் குழப்பமான அறிவியல் பட்டியலில் தேஜா வூ நீடிக்கிறது என்று கூறியுள்ளார் - டெக்சாஸ் ஏ & எம் சுகாதார அறிவியல் மையத்தின் மருத்துவ பேராசிரியரான மைக்கேல் ஹூக்..!


டெக்னீக்கல் கோளாறு :
சில ஆராய்ச்சியாளர்கள் இந்த தேஜா வூ நிகழ்வானது மூளையின் தொழில்நுட்ப இயக்க கோளாரால் ("technical problem") நிகழ்கிறது என்றும் நம்புகின்றனர்.


பரிச்சயமான குழப்பம் :
அதவாது ஒரு குறிப்பிட்ட நியூரான்கள் குழுவானது, நிகழ்காலம் மற்றும் கடந்த காலம் ஆகிய இரண்டிற்கும் நடுவே அடையாளம் காணுதல் மற்றும் பரிச்சயமான குழப்பம் ஆகிய இரண்டையும் உருவாக்குவதால் தான் "தேஜா வூ" அனுபவம் ஏற்படுகின்றது.


நரம்பியல் பாதை :
எனினும், டாக்டர் ஹூக் சில ஆய்வுகளின் படி "தேஜா வூ" நிகழ்வானது மூளையின் நரம்பியல் பாதைகளில் ஏற்படும் ஒரு செயலாக்க பிரச்சனை காரணமாக கூட விளையலாம் என்று குறிப்பிடுகிறார்.


அறிவியல் விளக்கம் :
அறிவியல் புரிதலின் கீழ் கொடுக்கப்படும் விளக்கம் : மூளையின் அதிக புறணி பகுதியை அடைவதற்க்கு முன்பு நமது உணர்வு தகவல் ஆனது பல வழிகளில் பயணம் செய்ய நேர்கிறது.


இடைவெளி :
மூளையை சென்றடையும் அதே நேரத்தில் உணர்வு தகவல் ஆனது மூளையின் பல்வேறு பகுதிகளில் பயணித்துக்கொண்டே தான் இருக்கும். தகவல் மூளையை அடையும் அந்த இடைவெளியில் தேஜா வூ உணர்வு ஏற்படலாம்.


வெவ்வேறு பாதை :
மற்றொரு அறிவியல் விளக்கம் : மூளைக்குள் உணர்வு தகவல் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் போது அதன் கருத்து பாதிக்கப்பட்டு, இரண்டு வெவ்வேறு செய்திகளாய் சென்றடையலாம்.


இரண்டாம் செய்தி :
அப்படியாக, ஒரு தகவல் இரண்டாக உடையும் போது இரண்டாவதாக மூளைக்கு வந்தடையும் செய்தியானது, இது ஏற்கனவே நடந்தது போன்ற ஒரு தேஜா வூ உணர்வை ஏற்படுத்தலாம்..!


தத்துவார்த்த இயற்பியலாளர் :
அமெரிக்க எதிர்காலவாதியும், தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் அறிவியல் விவரணையாளரும் ஆன டாக்டர் மிச்சியோ ககு, தேஜா வூ சார்ந்த தனது விளக்கத்தையும் அளித்துள்ளார்.


குவாண்டம் இயற்பியல் :
டாக்டர் மிச்சியோ ககு - இணை பிரபஞ்சங்கள் (Parallel universes) மற்றும் குவாண்டம் இயற்பியல் (quantum physics) மூலம் இந்த மர்மமான தேஜா வூ நிகழ்வை விளக்குகிறார்.


திறன் :
வெவ்வேறு பிரபஞ்சத்திற்கு இடையிலாக ஒரு புரட்டலை நிகழ்த்தும் திறன் (ability to flip between different universes) உங்களிடம் இருக்குமானால் அதன் விளைவாக ஏற்படுவதே தேஜா வூ என்கிறார் டாக்டர் மிச்சியோ ககு..!


ஆதரவு :
மற்ற பிரபஞ்சங்கள் (அண்டங்களின் கோட்பாடு - multiverse theory) என்ற யோசனையை இயற்பியல் தத்துவ இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஸ்டீவ் வெயின்பர்க் உட்பட பல விஞ்ஞானிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒன்றுசேர்ந்தே பிரபஞ்சங்கள் :
பேராசிரியர் வேயின்பேர்க்கின் கருத்துப்படி "நாம் இருக்கும் அதே அறைக்குள் எண்ணற்ற ஒன்றுசேர்ந்தே பிரபஞ்சங்கள் இருக்க சாத்தியமுண்டு"..!

கருத்துரையிடுக Disqus

 
Top