அந்த வரிசையில் மைக்ரோசாப்ட்டின் புதிய வரவு ‘ஹவ்-ஓல்ட்’ (How-Old) வலைத்தளம். இந்த வலைத்தளத்தில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்த சில நொடிகளில் வயது என்ன என்பதை இந்த தளம் தெரிவித்துவிடும். ‘ப்ராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட்’ (Project Oxford) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே, மைக்ரோசாப்ட் இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே இணையவாசிகளிடம், எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த திட்டத்தின், முழு பணிகளே நிறைவடையாத நிலையில், பயனர்கள் கொடுத்த வரவேற்பு மைக்ரோசாப்ட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நீங்களும் உங்கள் புகைப்படத்தைக் கொண்டு, உங்கள் வயதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே உள்ள இணையத் தொடர்பைத் தொடரலாம்.
http://how-old.net/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக