1. உலக அளவில், இணையச் சந்தையில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. வரும் 2017ல், இந்தியாவில் 50 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். இவர்களில், 40 கோடி பேர் மொபைல் போன்கள் வழியாக இணையத்தை அணுகுவார்கள். தற்போது இருப்பதைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகமாகும்.
2. தற்போது, 35 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 15.2 கோடி பேர் மொபைல் போன் வழி இணையப் பயனாளர்கள்.
3. டிஜிட்டல் வளர்ச்சியில், இந்தியா அதன் சிகரத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, கிராமங்களில், இணையப் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
4. ஓர் இணையதளத்தின் புகழும் பயன்பாடும், அதில் தரப்பட்டுள்ள பொருள் மற்றும் தகவல்கள் அடிப்படையிலும், அவை காட்டப்படும் வகையின் அடிப்படையிலும் மட்டுமே உயரும்.
5. உலக அளவில், 2020 ஆம் ஆண்டில், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 500 கோடியாக உயரும். இது கனவிலும் அல்லது கற்பனையிலும் எண்ணிப் பார்க்காத மாற்றத்தைத் தர உள்ளது. இதனை இணைய தொழில் நிறுவனங்கள் உணர்ந்து எழ வேண்டும். இந்த இணைய மக்களின் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். இதற்கு, கூகுள் இணைய சேவை தொழில் தொடங்குபவர்களுக்கு, தொடக்க உதவியாக, இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில், பன்னாட்டளவில் தன் அலுவலக வளாகங்களில் இடம் தருகிறது. அத்தகைய நிறுவனங்களின் பணியையும் கண்காணித்து உதவுகிறது. ஏற்கனவே தன் ஐந்து வளாகங்களில் இடம் தந்துள்ள கூகுள், வரும் சில மாதங்களில், தன் பிரேசில் வளாகத்திலும் இடம் தர உள்ளது. முதலில், இது போன்ற முயற்சியை, 21012 ஆம் ஆண்டில், கூகுள் லண்டன் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. இதுவரை, 1800 நிறுவனங்கள் அங்கு தொடங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, டெல் அவிவ், சீயோல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
6. எந்த ஒரு நிறுவனமும், தன் தொடக்கத்திலேயே ஒரு பன்னாட்டு நிறுவனமாகத் தொடங்கப்படலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம், தன் தொடக்கத்தினை ஒரு கார் ஷெட்டில் மேற்கொண்டது பலருக்கு நினைவிருக்கலாம். கூகுள் ஒரு தேடல் இயந்திரமாகத் தன் தொழிலைத் தொடங்கினாலும், தற்போது, உலகப் பொருளாதாரப் பிரிவில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு டிஜிட்டல் தொழிலகமாக மாறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக