தீர்ப்பு என்பது ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் எதர்க்காக தண்டிக்கப்படுகிறார் என்று சிந்திக்கவேண்டும்

இந்தோனிஷியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு!
இந்தோனிஷியாவில் வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார். வழக்கை மிகக்கவனமாக கையாண்ட நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்.
நான் திருடியது உண்மைதான் என்றும், எனது பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான் எனவே வேறுவழியின்றி இச்செயலை செய்தேன் என்று தனது தவறை ஒப்புக்கொண்டார். இதை கேட்டதும் நீதிபதி.
என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பதிமூணு இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து.. இங்குள்ள ஒவ்வொருவர் மீதும் நான் ஐம்பதுஆயிரம் ருபாயா (ஐந்தரை டாலர்) தண்டணையாக இடுகின்றேன்.
காரணம், இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன். என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார்.
இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார். இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) பதிமூன்று லட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.
இதுதான் மகேசன் தீர்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக