வட இந்தியாவில் திருமணம் ஆனாலும் தமிழகத்தில் பிஸியான தேனி போல அபிசியலி சிங்களாய் இருப்பவனே,
அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ் என அன்பை காட்டி அகிலத்தை அளந்தவனே,
தான் சிங்கிளாய் இருந்தாலும் அனைவருக்கும் கல்யாணம் செய்து வைக்கும் கன்னி மூலனே,
எலியவர்களையும் நட்பாக்கும் நல்லவனே,
கொழுக்கட்டைக்கு கொடையருளும் கொடை வள்ளலே,
முழு முதற் கடவுளாய் இருந்தும் தலகணமற்றவனே,
பேச்சுலர்களுக்கு வீடு கூட கிடைக்காது என அப்போதே நிருப்பித்தவனே,
சிங்கிள்களின் சிங்கமே,
உணவை ரசிக்க சொல்லி தந்தவனே உனக்கு அன்பு நண்பனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
அப்பறம் பர்த் டே ட்ரீட்டாய் என் வாழ்க்கையில் உன் பார்வையிருக்கும்படி செய்.
இப்படிக்கு என்றும் அன்புடன்
-உன்னின் நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக