0

Internet_service.jpg



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

"அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services) மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்" என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.

 
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் "இல்லந்தோறும் இணையம்" திட்டம் தமிழக அரசின் தொலைநோக்கு திட்ட அறிக்கை 2023ல் குறிப்பிட்டபடி, மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள மனித ஆற்றலை பயன்படுத்தி புதிய முயற்சிகளை ஊக்குவித்திடும் வகையில் சென்னை – தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் 3 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர் மையம் (Startup Warehouse); மாணாக்கர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்காக மேகக்கணினி சார்ந்த சேவைகள்  மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள் ஆகியவற்றை  குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம்;


சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தின்  தகவல் தொழில்நுட்ப மற்றும் கணினி உள்கட்டமைப்பினை சிறப்புற பயன்படுத்தி பல்வேறு துறைகளின் கணினி பயன்பாடுகளை ஏற்றம் செய்யும் பொருட்டு 10 கோடியே 41 லட்சம் ரூபாய்  செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேகக்கணினிய  அமைப்பு என மொத்தம் 13 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலான தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top