0

தமிழ் புத்தகம்
தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி. இன்னும் நிறைய தளங்கள் உள்ளன. நான் தேடியவற்றில் கிடத்த தளங்களை மட்டும் தொகுத்துள்ளேன்.அவற்றில் மிகச்சிறப்பான தளங்கள் எனில் ஓபன்ரீடிங், அழியாச்சுடர்கள்தமிழ் தொகுப்புகள், சிலிக்கான் ஷெல்ப் போன்றவையாகும்.  ஓபன் ரீடிங் தளத்தில் வகைவகையாகப் புத்தகங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.அவை

சிலிக்கான் ஷெல்ஃப் தளம் புத்தகங்களுக்கான ஒரு பிளாக் என அறிமுகப்படுத்திக்கொண்டு நிறைய சிறுகதைகள் எழுத்தாளர்கள் வரிசையில் பிரிக்கப்பட்டுள்ளது.
நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என அறிமுகப்படுத்தும் அழியாச்சுடர்கள் தளமும் பிரபலமான அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.
war of the ring திரைப்படம் உருவான விதம்பற்றி 16 எம்பி மற்றும் 280 பக்கங்கள் கொண்ட அருமையான மின்நூல் கருந்தேள் தளத்தில் கிடைக்கின்றன. மிகவும் கஷ்டப்பட்டு பல நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ளார்கள்.
தமிழ் தொகுப்புகள் தளமும் வகைவகையாக புத்தகங்களைப் பிரித்து எழுத்தாளர்களின் பெயர்களோடு பட்டியலிட்டுள்ளனர்.
சமையல், பயணக்கட்டுரை, கம்ப்யூட்டர், பகவத்கீதை, முல்லா கதைகள், பாட்டி வைத்தியம் என அத்தனையும் சுமார் எழுபதுக்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் ஒரே கோப்பில் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். இதில் save file to computer என்பதில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
செந்தில்வயல் தளத்தில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன. அனைத்துமே உபயோகமான புத்தகங்கள் ஆகும். 
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலை ஓசை, பார்த்திபன் கனவு என மிகவும் பிரபலமான நாவல்கள் மற்றும் புத்தகங்களை டவுன்லோட் செய்ய தங்கம்பழனி தளத்தினை கிளிக் செய்யுங்கள்.
தமிழ்தேனி தளத்திலும் மிகவும் பிரபலாமன எழுத்தாளர்களின் புத்தகங்களின் இணைப்பு உள்ளது. இதைப்பயன்படுத்தி நீங்கள் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யலாம்.
காதலின் ரகசியம் என்ற புத்தகம் 1 எம்பி கொள்ளளவில் உள்ளது. விழியீர்ப்பு விசை என்ற தபூசங்கரின் புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். தேவதைகளின் தேவதை, எனது கருப்பு பெட்டி போன்ற தபூசங்கரின் புத்தகங்களும் உள்ளன.
கவிஞர் அறிவுமதியின் நட்புகாலம் புத்தகம் பெற இங்கே கிளிக் செய்யவும். இந்த கவிதைத்தொகுப்பு ஆண்பெண் நட்பின் ஆழத்தினைக்காட்டும்.
கவிஞர் வைரமுத்துவின் மிகவும் ரசிக்கத்தக்க கவிதை வடிவில் ஒரு காதல் காவியம் அன்றால் அது தண்ணீர் தேசம்தான். அதனைப்பெற இங்கு கிளிக் செய்யவும்.
மேலும் சில தளங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் வார, மாத இதழ்களைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top