குணா விஷ்ணுவின் அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து இருந்தான்.. அவன் எதிர்பார்த்த மாதிரியே,விஷ்ணு அழைத்தான்..
அலைபேசி "Vishnu Informer" என்று சிமிட்டியது.
"குணா.. நான் சொன்னபடி செஞ்சுட்டியா?"
"எல்லாம் ரெடி.."
"சரி... ரெண்டையும் தனித்தனியா கவர்ல போடு.. ஒண்ணு கோகுலுக்கு இன்னொன்று மாதவனுக்கு.. கவனம் "
"ஓகே"
"இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க கோகுல் வருவான்!! அவன்கிட்ட ரெண்டையும் குடுத்து விடு"
குணாவிற்குத் தலை சுற்றியது... இரண்டையும் கோகுலிடம் கொடுத்தால்??
"தெரிஞ்சு தான் பேசறியா?? "
"ஆமா...ரெண்டையும் அவன்கிட்ட கொடு.. மாதவனுக்கு உள்ளதை மாதவன்கிட்ட கொடுத்துட சொல்லு"
"சரி.. உன் இஷ்டம்"
அரை மணி நேரத்தில் கோகுல் வந்தான்.. அவனிடம் இரண்டு கவர்களையும் குணா ஒப்படைத்தான்...
"விஷ்ணு ஏதும்?"
"ஆமா... இந்தாங்க!! ஒரு சின்ன உதவி... மாதவன் சார்கிட்டேயும் ஒன்று கொடுக்க வேண்டும்.. கொடுக்குறீங்களா?"
"தாராளமா!!"
"ஒண்ணு உங்களுக்கு... இன்னொன்று மாதவன் சாருக்கு"
கோகுல் ஒரு நமட்டுச் சிரிப்புடன் கொண்டே விடை பெற்றான்..
சிறிது நேரத்தில், விஷ்ணு நேரிலேயே வந்தான்..
"எல்லாம் சுமூகமாக முடிந்தது" என்றான் குணா
"நல்லது"
"சரி.. ஒரு சந்தேகம்..
கோகுலுக்கு ஏதோ கோட் எழுதி கொடுத்த.. தப்பா கொடுத்து இருக்கதா சொல்லி மாதவன் சாருக்கு ஒரு சிட்டு.. கடைசியில் ரெண்டையும் கோகுல் கிட்டயே கொடுத்தா அவன் அதைப் படிச்சிட மாட்டானா?"
"படிக்கட்டும் என்று தான் கொடுக்க சொன்னேன்!!"
"என்னது?"
"மாதவன் சார் கேட்டதா சொல்லி இந்த கோகுல் என்கிட்ட நம்ம ******* பாஸ்வேர்ட் கேட்டான்.. அவன் கேட்ட விதமே எனக்கு சந்தேகத்தை வரவைத்தது.. சந்தேகம் இருந்தாலும் உறுதிப்படுத்த முடியல...
மாதவன் அவர்கிட்ட கேட்டு இருந்தா, அவன் மத்த கவரைப் பிரிக்க மாட்டான்..
இவன் அதைப் பயன்படுத்த கேட்டால், 'இதைப் பற்றி எதுவும் மாதவனுக்கு எழுதி இருக்கேனா' என்று பிரித்துப் பார்ப்பான்.. அது தப்பான குறி என்று பயன்படுத்த மாட்டான்!! இந்த விடயம் மாதவனுக்குத் தெரியும் என்று நினைத்து மீண்டும் என்னிடம் கேட்கவும் மாட்டான்"
"சரி... என்னை ஏன் கொடுக்க சொன்ன?"
நானா கொடுத்தா ரெண்டையும் அவன்கிட்ட கொடுப்பேனா?? அது தான் உன் மூலமா
கொடுத்தேன்...நீயும் தெரியாத மாதிரி கொடுத்துட்ட!!"
"ஆனா, நம்ம கோட் S W H2 6F தானே??? சரியா தானே எழுதி இருக்க?"
" நான் கோகுல் கிட்ட கொ டுத்த குறியீடு சரியானது தான்..ஆனா, அவன் அதைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த கூடாது.. அதுக்குத் தான், இந்த ஏற்பாடு!!"
"ஆயிரம் ஆனாலும், நீ ஒரு பெரிய அப்பாடக்கர் தான் என்று நிரூபிச்சுட்ட.. நீ பெரிய கில்லாடி தான்!!" என்றான் குணா!!
விஷ்ணு கண்ணடித்து சிரித்தான்..

கருத்துரையிடுக Facebook Disqus