இஸ்ரேலிய விமான ஏவுகணை தாக்குதல் ஒன்றில், ஹமாஸ் ராணுவத் தளபதி அஹ்மத் அல்-ஜாபரியை கொலை செய்தது இஸ்ரேலிய விமானப்படை. காசா பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை, இரு தரப்பையும் யுத்தம் ஒன்றுக்கு மிக அருகே கொண்டு வந்திருக்கிறது. யுத்தம் இன்று சிறிய அளவில் நடக்கிறது.


இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கி விட்டனர். இஸ்ரேலிய விமானப்படை நேற்றும், இன்றுமாக 20 குண்டுவீச்சுகளை காசா பகுதிமீது நடத்தியுள்ளது. பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் இருந்து, இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல்களை நடத்துகின்றனர். இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த போட்டோ எஸ்ஸேயில் உள்ள போட்டோக்களில் பெரும்பாலானவை, இரு பகுதிகளிலும் இன்று எடுக்கப்பட்டவை. காசா பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும், இஸ்ரேலிய நகரங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் கலந்து தருகிறோம்.
ஒவ்வொரு போட்டோவாக, நிஜமான யுத்தம் எப்படி நடக்கிறது என்பதை பாருங்கள்.
 

 கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதால் நகரில் இருந்து எழும் புகையை பாருங்கள்.

 

கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கியாத் மலாச்சி நகரில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர், ரத்தம் தோய்ந்த மேஜை ஒன்றை எறிவதை பாருங்கள். காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் இங்கு விழுந்து வெடித்ததில், 3 பேர் கொல்லப்பட்டனர்.


கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலின் தென்பகுதியை  நோக்கி ராக்கெட் ஒன்றை செலுத்தும் காட்சி.

 

கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய தாக்குதலால் கிளம்பும் புகை இது.


கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதியில் எல்லை அருகே இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்களின் ராக்கெட் தாக்குதலுக்கான சைரன் ஊதப்பட்டபோது, இஸ்ரேலிய ராணுவத்தினர் பங்கர்களுக்குள் ஓடும் காட்சி இது.

 

கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் உள்ள ஷைஃபா வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட குழந்தையை கையில் வைத்திருக்கும் தந்தையின் பெயர், ஜிஹாத் மஷாராவி. குழந்தையின் பெயர், அஹ்மத். வயது 11 மாதங்கள்.



கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் நேற்று (புதன்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசிவிட்டு சென்ற பில்டிங் ஒன்றில் இருந்து, வயதான பெண் ஒருவரை சக பாலஸ்தீனியர்கள் வெளியேற்றும் காட்சி இது.

 

கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமான குண்டுவீச்சால் எரிந்து கொண்டிருக்கும் இடத்தை அவசரமாக கடந்து செல்லும் பாலஸ்தீனியர் ஒருவர்.



கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதி நகரான நெத்திவோட்டில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய பிரதமர் இந்த தாக்குதல்கள் குறித்து விடுத்த அறிவித்தலை கேட்கும் இஸ்ரேலியர்கள்.



கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதி நகரான நெத்திவோட்டில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. வெடிகுண்டுகளில் இருந்து தப்புவதற்கான பங்கர் ஒன்றுக்குள் அமர்ந்து விளையாடும் இஸ்ரேலிய குழந்தைகள்.


 கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கியாத் மலாச்சி நகரில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்களின் ராக்கெட் வந்து விழுந்தபோது, தரையில் விழுந்து குண்டு சிதறல்களில் இருந்து கவர் எடுக்கும் இஸ்ரேலிய பெண்.

 

 கீழேயுள்ள போட்டோ காசா நகரில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் ராணுவ தளபதி அஹ்மத் அல்-ஜாபரியின் உடலை ஹமாஸ் போராளிகள் எடுத்துச் செல்லும் காட்சி இது. பாதுகாப்பு காரணங்களால், ஹமாஸ் முக்கிய தலைவர்கள் யாரும் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை.

 

கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதி நகரான ஸ்தேர்தொட்டில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்களின் ராக்கெட் ஷெல்கள் நகரில் வந்து விழுந்து வெடிக்கும் காட்சி இது.

 



கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கியாத் மலாச்சி நகரில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்களின் ராக்கெட் ஷெல் வந்து விழுந்தபோது, பாதுகாப்பற்ற இடம் ஒன்றில் சிக்கிக்கொண்ட இஸ்ரேலியர்கள் சிலர்.
 

 கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதி நகரான பீர்-ஷீவாவில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய ராணுவத்தினர் காசா பகுதியை நோக்கி Iron Dome ரக ஏவுகணையை ஏவும் காட்சி இது.

 

கீழேயுள்ள போட்டோ காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமான தாக்குதலால் காயமுற்ற பாலஸ்தீன பெண் ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படும் காட்சி இது.
 

கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கியாத் மலாச்சி நகரில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் ஏவிய ராக்கெட் ஷெல் ஒன்று வந்து தாக்கிய அப்பார்ட்மென்ட்டில், குழந்தை படுக்கும் அறையின் சுவரில் உள்ள ரத்த சிதறல்களை அழிக்கும் காட்சி இது.
 

கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலை நோக்கி வேகமாக புறப்பட்டு செல்கின்றன பாலஸ்தீனியர்களின் ராக்கெட்டுகள். இன்னும் சிறிது நேரத்தில் தெற்கு இஸ்ரேலில் எங்கோ ஒரு இடத்தில் விழுந்து இவை வெடிக்கப் போகின்றன.
 

கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதி எல்லை அருகே இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமானம் ஒன்று காசா பகுதியில் குண்டு வீசும் காட்சி இது.
 

கீழேயுள்ள போட்டோ காசா வடபகுதியில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய விமானம் குண்டு வீசிய இடம் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் காட்சி.
 

கீழேயுள்ள போட்டோ இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கியாத் மலாச்சி நகரில் இன்று (வியாழக்கிழமை) எடுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்களின் ராக்கெட் ஷெல் வருவதைக் குறிக்கும் சைரன் ஒலித்தபோது, தரையில் வீழ்ந்து படுக்கும் ஒரு இஸ்ரேலிய குடும்பம்.
 
 







 
Top