இப்போது வரும் நவீன விலை உயர்ந்த கார்களில் வசதிக்காக்கவும், பாதுகாப்புக்காகவும் செய்யப்படும் தொழில் நுட்பங்கள், கார் திருடுவதை எளிதாக்கி விடுவதாக ஆய்வ உசெய்து தெரிவித்துள்ளனர்.

காரை பாதுகாக்க ‘சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்’ (Central Locking System) இருந்தால் போதும். கூடுதல் பாதுகாப்புக்கு ஸ்டீயரிங் வீலை லாக் செய்தால் போதும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.

ஆனால் இதை எல்லாம் மீறு உங்கள் கார் ‘தானாக(Automatic start) ஸ்டார்ட்’ ஆனால்… நீங்கள் ‘பிரேக்கை அழுத்தாமலே கார் பிரேக் பிடித்தால்…’கார் மியூசிக் சிஸ்டம் தானாக பாட ஆரம்பித்தால்…?’ இதெல்லாம் நடக்கும் என்கிறார்கள். வாஷிங்கடன் பல்கலைக்கழக(University of Washington students) ஆய்வு மாணவர்கள்.

மிக விலை உயரந்த நவீன கார்களில் பல அம்சங்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களின்(Computer Programme) அடிப்படையில் இயங்குகின்றன. இந்த கம்ப்யூட்டர்களை பிற கம்ப்யூட்டர்களைப் போல்வே ‘ஹாக்’ செய்ய முடியும்.

இதனை கொண்டு உங்கள் காரின் கட்டுப்பாட்டை(Car Control) வேறு ஒரு கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ள முடியும். காரில் பாடிக்கொண்டிருக்கும் பாட்டை திடீரென்று நிறுத்தி வேறு ஒரு பாட்டை பாட வைக்கவும், காரின் பிரேக்கை பிடிக்க வைக்கவும் எங்கேயோ உள்ள ஒரு முகம்தெரியாத நபரால் முடியும். இதை ‘கார் ஹேக்கிங்’ என்கிறார்கள்.

கார்களில் இப்போது ப்ளூ டூத்(Blue Tooth), பென் டிரைவ்(Pendrive), வை-பை(Wi-fi) போன்ற பல வசதிகள் வந்துவிட்டன.

இதில் பென் டிரைவ் மூலமாகவோ, அல்லது ப்ளூடூத் மூலமாகவோ இணைப்பை ஏற்படுத்தி காரில் உள்ள எலக்ட்ரானிக் விஷயங்களை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள் அந்த பல்கலைக்கழக மாணவர்கள்.

இதை வெறும் ஆய்வு அறிக்கையோடு நிறுத்திவிடலாமல், பல்கலைக்கழகத்திற்கு சில கார்களைக் கொண்டு வந்து நிறுத்தி அந்த கார்களை “HACK” செய்து காட்டி காரின் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி, கார் உரிமையாளர்களை உலகெங்கும் பயமுறுத்தியது. அதிர்ந்து போன கார் நிறுவனங்கள், “காரின் எலக்ட்ரானிக் சிஸ்டத்திற்குள்(Car Electronic System) அவ்வளவு சுலபமாக யாரும் நுழைந்துவிட முடியாது. அது உச்சகட்டப் பாதுகாப்புடன் புரோகிராம் செய்யப்படுகிறது என்று விளக்கம் கொடுத்தன.

ஆனாலும் இந்த ஹேக்கிங்கிலிருந்து தங்களின் தயாரிப்புக் கார்களைப் பாதுகாக்க பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளன கார் நிறுவனங்கள்(Car Factroies ).
 
Top