0
போர்வெல் லாரிகள் - எத்தனையோ முறை நாம் சாலைகளில் இவற்றைப் பார்த்திருப்போம். ஆனால், இவற்றை வாங்குவது, பராமரிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா? 


"லாரி சேஸியின் விலை சுமார் 20 லட்சம். இதை போர்வெல் மெஷினுக்கு ஏற்ற வகையில் பாடி கட்டி முடிக்கும்போது, 30 லட்சம் ஆகிவிடும். கம்ப்ரஸரின் விலை மட்டுமே 30 லட்சம். பின்பு, பைப்புகள், தேவையான உபகரணங்கள், இன்னொரு லாரி என எல்லாம் சேர்த்து ஒரு கோடி ரூபாய் வரை ஆகிவிடும். இதுவே, 4.5 இன்ச் மெஷின் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஆகும்.

போர்வெல் தோண்ட, முதல் 300 அடிகள் தோண்ட அடிக்கு 60 ரூபாய் வீதமும், 300 அடிக்கு மேல் 65 ரூபாயில் இருந்து 75 ரூபாய் வரை கட்டணம் வாங்குகிறோம். பூமியைத் தோண்டும் கருவியான ஹேமரை 10,000 அடிக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஹேமரில் இருக்கும் ட்ரில்லிங் பிட் 2,000 அடிக்கு ஒரு முறை தீட்ட வேண்டும். நல்ல முறையில் பராமரித்துவந்தால், கம்ப்ரஸர் 25 ஆண்டுகள்கூட உழைக்கும்.

ஆனால், இந்தத் தொழில் சில பிரச்னைகளும் உள்ளன. ராடு உடைவது, ஹேமர் சிக்கிக்கொள்வது என நடந்தால், செலவு பழுத்துவிடும். ஒரு போர்வெல் போட்டு முடித்தால், 10,000 ரூபாயில் இருந்து 25,000 வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தொடர்ந்து வேலைக் கிடைத்தால்தான், பணம் மிச்சம் ஆகும். இல்லாவிட்டால் வட்டி கட்டி மாளாது'' 

கருத்துரையிடுக Disqus

 
Top