0
வளர்ந்து வரும் இணையதள தொழில் நுட்பம் ஆக்கம் மற்றும் அழிவு என்று இரண்டு திசைகளிலும் ஒரே வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஹேக்கர்கள் எனும் 'இணையத்திருடர்கள்' தீவிரவாதிகளை போல் கருதப்பட்ட காலம் போய், தற்போது ஹேக் செய்வது எப்படி? என்று யூ-டியூபில் தேடினால் நம்மை ஹேக்கராக மாற்ற 14,000 பயிற்சி வீடியோக்கள் தயாராக உள்ளன. 


வை-பை நெட்வொர்க்குகள் எவ்வளவு எளிதில் ஹேக் செய்யக்கூடியதாக இருக்கிறது என்பதை உணர்த்த சுயாதீன இணைய பாதுகாப்பு நிபுணர் மார்கஸ் டெம்ப்சியின் மேற்பார்வையில் லண்டனில் ஹேக்கிங் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பங்கேற்ற 7 வயது சிறுமி 10 நிமிடம் 54 நொடியில் ஒரு பொது வை-பை நெட்வொர்க்கையே ஹேக் செய்து காட்டினாள். 

சிறுமிக்கு பதிலாக இதையே ஒரு திருடன் செய்தால் அந்த வை-பையோடு இணைந்திருக்கும் பல நூறு அலைபேசியில் உள்ள உள்நுழைவு விவரங்கள் திருடியிருக்கலாம், அலைபேசியை இயக்கியிருக்கலாம், மின்னஞ்சல் கணக்குகளை ஹேக் செய்து ஆன்லைன் வங்கி கணக்குகளில் புகுந்து மோசடி செய்திருக்கலாம்



அண்மையில் பிரிட்டன் கேபினெட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்நாட்டில் பாதி பேர் இணைய குற்றவாளிகளாக மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. 



சில நிமிடங்களில் ஒரு சிறுமியால் வை-பை நெட்வொர்க்கை ஹேக் செய்ய முடியுமென்றால் ஒரு தொழில்முறை ஹேக்கரால் எவ்வளவு பாதிப்பை உண்டாக்க முடியும் என்று சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.


கருத்துரையிடுக Disqus

 
Top