அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த இந்திய
வம்சாவளி மாணவன் சுபம் பேனர்ஜி, 13 வயதிலேயே இளம் தொழிலதிபராக
உருவெடுத்துள்ள மூளைக்காரன்.
2014--ஆம் ஆண்டு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்காக புதிதாக புராஜெக்ட் ஒன்றை செய்ய நினைத்தவனுக்கு, பார்வையற்றவர்களுக்கு உதவும்வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. 'பார்வையற்றவர்கள் எப்படி படிப்பார்கள்?' என்று பெற்றோரிடம் கேள்வியெழுப்ப, 'நீயாகவே கூகுள் செய்துபார்' என்று சொல்லிவிட்டனர்.

கணினியும் இணையமும் கைகூட, தேடுதலை தீவிரப்படுத்திய சுபத்துக்கு, இன்னொரு விஷயமும் புலப்பட்டது.
பார்வையற்றோருக்கான அச்சுப்பிரதிகளை எடுப்பதற்கு
பயன்படும் பிரைலி பிரின்ட்டர், மிக அதிக விலையில் இருப்பதால் வளரும்
நாடுகளில் இதனைப் பயன்படுத்துவது மிகக்குறைவு என்பதை தெரிந்து கொண்டான்.
எனவே, பார்வையற்றவர்களுக்காக 'லேகோ' என்னும் ரோபாட்டிக் உதவியுடன்
விலையும், எடையும் குறைந்த பிரைலி பிரின்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில்
இறங்கினான் சுபம்.
தற்பொழுது இன்டெல் நிறுவனம், சுபத்துடைய இந்த பிரைகோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது!
கருத்துரையிடுக Facebook Disqus