உலகிலேயே முதன் முதலாக, என்.எப்.சி. தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட் ஒன்றை, தோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்.எப்.சி. (NFC Near Field Communication) தொழில் நுட்பத்தின் மூலம், இரண்டு டிஜிட்டல் சாதனங்கள், ஒன்றுக்கொன்று இணைப்பின்றி, அருகாமையில் இருக்கும் நிலையிலேயே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.
மொபைல் போன்களில் பரவலாகத் தரப்படும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம், நாம் மொபைல் வேலட் எனப்படும் வசதியில் பணம் செலுத்தி, மொபைல் போனை, கடைகளில் உள்ள இதனுடன் இணைந்து செயலாற்றும் சாதனத்தின் முன் சற்று அசைத்தாலே போதும்; நாம் அமைத்திட்ட பணத்தொகை அந்த சாதனத்திற்கு மாற்றப்பட்டு, அதன் மூலம் கடைக்காரரின் வங்கிக் கணக்கில் சேரும்.
எஸ்.டி. கார்ட்கள் நாம் தகவல்களைச் சேர்த்து வைக்கப் பயன்படுத்தும் புதிய சிறிய அளவிலான டிஜிட்டல் சிப்களாகும். இதில் சேமிக்கப்படும் தகவல்களை, மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்க்க வேண்டும்.
தோஷிபா, தற்போது இந்த எஸ்.டி. கார்ட்களில் என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தினைத் தருகிறது. இதன் மூலம், இதற்கான அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யப்பட்ட மொபைல் போன் முன், இந்த எஸ்.டி. கார்டைக் காட்டினால், கார்டில் எவ்வளவு இடம் உள்ளது என்ற தகவலையும், கார்டில் உள்ள போட்டோக்களின் சிறிய அளவிலான படங்களையும் காணலாம். இதனை தோஷிபா Secure Digital High Capacity (SDHC) என அழைக்கிறது. இது 8, 16 மற்றும் 32 ஜி.பி. அளவுகளில் வருகிறது.
இவை UHS Speed Class 1 (4K2K விடியோ பதியும் திறன் கொண்டது.) டேட்டா சேவ் செய்வதில் இது SD Speed Class 10 வேகத்தைக் கொண்டுள்ளது. நொடிக்கு 10 எம்.பி. டேட்டா மாற்றும் திறன் கொண்டது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
கருத்துரையிடுக Facebook Disqus