சமீபத்தில் அமெரிக்கா, நியூயார்க் பகுதியில் அடித்த சான்டி புயலால் ஏராளமான கார்கள் சேதமடைந்தன. அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைத்து கார்களும் இன்ஸூர் செய்யப்பட்டுள்ளதால், சேதமடைந்து இயங்க முடியாத கார்களை எடுத்துக்கொண்டு இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை.
சரி, ஆயிரக் கணக்கான கார்களை எடுத்து என்ன செய்வது? எங்கே நிறுத்துவது?

Calverton Executive Airpark என்பது, நியூயார்க் லாங்-ஐலேன்ட் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய விமான நிலையம். கோடை காலத்தில், பிரைவேட் பிளேன்கள் வந்துபோகும் இந்த ஏர்போர்ட், குளிர் கால மாதங்களில் மூடப்பட்டிருக்கும். இந்த ஏர்போர்ட்டை சுற்றி, மிகப்பெரிய நிலம் உண்டு. இந்த நிலத்தில் கண்வைத்தது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம்.

கீழேயுள்ளதுதான் ஏர்போர்ட்.  அது இப்போது எப்படியுள்ளது என்று காண, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
cars-parked-20130109-1 


இங்கே கார்களை கொண்டுபோய் நிறுத்தினால் என்ன என்ற கில்லாடி ஐடியா வந்தது. ஆனால், சும்மா நிறுத்த முடியாதே. பலே டீல் ஒன்று ஒர்க்-அவுட் ஆனது. கீழே போட்டோவில் உள்ளதுதான் ஏர்போர்ட்டை சுற்றியுள்ள, மிகப்பெரிய நிலத்தில் பார்க் பண்ணப்பட்ட கார்கள். சரி டீல் என்ன? அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
cars-parked-20130109-2 

அமெரிக்க கார் ஏல நிறுவனம் Insurance Auto Auctions Inc, சேதமடைந்த கார்களை மொத்தமாக வாங்கி, ஏலத்தில் விற்பதில் கில்லாடிகள். இவர்கள், இந்த விமான நிலையத்துடன் ஒரு டீல் செய்துள்ளனர்.
சேதமடைந்த கார்களை நிறுத்துவதற்கு, ஒரு ஏக்கர் பார்க்கிங்குக்கு, மாதத்துக்கு $3,200 கட்டணம் என்பதே டீல்.
இதையடுத்து, பெரிய ட்ரெயிலர்களில் சேதமடைந்த கார்கள் கொண்டுவந்து, இங்கே வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. ஆன்-லைன் ஏலம் மூலம் இந்தக் கார்கள் விற்கப்பட்டு வருகின்றன! மொத்தம் 15,000 கார்கள் உள்ளன. அவற்றை நெருக்கமாக பார்த்து வாங்க விரும்பினால், அடுத்த போட்டோவில் பாருங்கள்.
cars-parked-20130109-3

cars-parked-20130109-5


 
Top