கதவுக்கு
அருகில் மனிதர் இருப்பதை உணரும் உணரிகளால் (sensors) தூண்டப்பெற்று
தானியங்கு கதவுகள் திறந்து கொள்கின்றன. அடிப்படையில் இரு வகை உணரிகள்
உண்டு: அழுத்ததை (எடையை) உணர்ந்து கொள்வன மற்றும் காணக்கூடிய அல்லது
அகச்சிவப்பு ஒளிக்கற்றைக்கான (visible or infrared beam of light)
தடையை/இடையூறை (interruption) உணர்ந்து கொள்வன ஆகியவையே அவ்விரண்டும்.
ஒளிக்கற்றை உணரி வகையில் ஒளிக்கற்றையை உருவாக்கும் பொறியும், கண்டறியும்
கருவியும் நடக்கும் வழியில் எதிரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்; கதவை
நோக்கி நடக்கும் மனிதரால் ஒளிக்கற்றையானது இடையூறுக்கு/தடைக்கு
உட்படும்போது, கதவைத் திறக்கும் தொழில் நுட்பம் செயல்பட்டு கதவு தானே
திறந்து கொள்ளும். அழுத்த வகையைச் (pressure type) சார்ந்த உணரியாக
இருந்தால், அது கதவுக்கு முன்பு இயங்கும் நடைமேடையின் (platform) அடியில்
வைக்கப்பட்டிருக்கும். மனிதர் அதன் மீது காலடி வைக்கும்போது அவரது எடையால்
அழுத்த உணரியும் கதவைத் திறக்கும் தொழிநுட்பமும் செயல்பட்டு கதவு தானே
திறந்து கொள்ளும்.
கருத்துரையிடுக Facebook Disqus