1
p2b.jpg
 
இப்போ எதுல முதலீடு பண்றதா இருந்தாலும் பான் கார்டு கண்டிப்பா வேணும். அதனால, முதல்ல பான் கார்டு வாங்கிக்கிடணும். ஓகே... அடுத்தக் கட்டமா, கே.ஒய்.சி. என்கிற உங்களின்  'வாடிக்கையாளரை அறிந்துக் கொள்ளுங்கள்" படிவத்தை ஏதாவது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை மூலம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதில் உங்கள் பெயர், முகவரி, பான் கார்ட் எண், வருமான விவரம் போன்றவற்றை நிரப்பி போட்டோ ஒட்டி கொடுக்க வேண்டும். கூடவே ரேஷன் கார்ட் மற்றும் பான் கார்ட் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டி வரும். இதை ஒரு முறை செய்தால் போதும்.
 
அடுத்து ஃபண்ட்டை செலக்ட் பண்ணணும். ஆனா அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்ல... முப்பது நாற்பது ஃபண்ட் கம்பெனிகள் நடத்திக்கிட்டிருக்கும் 700-க்கும் மேற்பட்ட ஸ்கீம்கள்ல இருந்து நமக்கு ஏத்தது எதுனு கண்டுபிடிக்கணும்.
 
அடிப்படையில இரண்டு விதமா ஃபண்ட் கிடைக்கும். இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகும் திட்டம். அதுக்கு என்.எஃப்.ஓ. (New Fund Offer) னு பெயர். இன்ணொண்ணு ஏற்கெனவே நடப்புல இருக்கிற திட்டம். இந்தவகைத் திட்டத்துல முதலீடு செய்ய-ணும்னா, மார்க்கெட்டுல அதோட யூனிட்டுக்கு என்ன மதிப்போ... முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ, நூறு ரூபாயோ எதுவோ அதைக் கொடுத்து யூனிட்டுகளை வாங்கணும். புது ஃபண்டுன்னா அந்த யூனிட் மதிப்பு 10 ரூபாயா இருக்கும்.
 
என்.ஏ.வி. (Net Asset Value)... ஃபண்ட் உலகத்துல இதை உச்சரிக்காத உதடுகளே இருக்காது. 'நிகர சொத்து மதிப்பு'னு தமிழ்ல சொல்லலாம். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தோட அன்றைய தினத்தின் மொத்த சொத்து மதிப்பை, அதனுடைய மொத்த யூனிட்டுகளால் வகுத்தால் கிடைக்கிறதுதான் என்.ஏ.வி. இந்தத் தொகையின் அடிப்படையிலதான் யூனிட்டுகளை விற்பாங்க. வாங்குறதுக்கும், விற்கிறதுக்கும் இடையே என்.ஏ.வி-யில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்குனு பார்ப்பாங்க. அதுதான் லாப நஷ்டத்தைக் கணக்கிட உதவுற கருவி.
 
இப்போ உங்க மூளைக்குள்ள பளிச்னு ஒரு மின்னல் வெட்டியிருக்குமே! 1,000 ரூபா கொடுத்து பழைய திட்டத்தோட ஒரு யூனிட்டை வாங்கறதை விட, பத்து ரூபாய் கொடுத்து புது ஃபண்டை வாங்கறதுதானே புத்திசாலித்தனம்னு ஒரு யோசனை வந்திருக்குமே!
 
பழைய திட்டம் எப்படிச் செயல்படும், எப்படி லாபம் சம்பாதிக்கும்னு நமக்கு நல்லாத் தெரியும். ஏன்னா, பழைய சரித்திரம்னு ஒண்ணு இருக்கு அதுக்கு! ஆனா, புதுசா சந்தைக்கு வர்ற திட்டம் எப்படிச் செயல்படும்னு யாருக்கும் தெரியாது. அதனால, பத்து ரூபாய்க்கு கிடைக்குதுங்கிறதுக்காக அது லாபமும் இல்லை, நூறு ரூபாய்க்குக் கிடைக்குதுங்கிறதால அது நஷ்டமும் இல்லை.
 
சிலசமயம், புது ஃபண்ட் நல்லவிதமாகப் போகலாம், அதைத் தெரிஞ்சுக்கிட்டு முதலீடு செய்யணும். அதுதான் முக்கியம்! ஆனால், நல்லதோ, கெட்டதோ சில திட்டங்கள்ல புதுசா வரும்-போது மட்டும்தான் முதலீடு செய்யமுடியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top