0
27939.jpg

Opera நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான Jon von Tetzchner என்பவரினால் Vivaldi எனும் புதிய இணைய உலாவி உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் இவ்வார ஆரம்பத்தில் வெளியிப்பட்டதுடன், உலாவியின் பீட்டா பதிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உலாவி அறிமுகம் செய்யப்பட்டு இதுவரையில் 2 மில்லியன் பயனர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஏனைய முன்னணி இணை உலாவிகளுக்கு சவால் விடும் வகையில் மிகவும் வேகமாக செயற்படக்கூடிய வகையில் இந்த உலாவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதன் முழுமையான பதிப்பு தவறுகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக Disqus

 
Top