0

தற்போதைய கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், கொரோனா தொற்று அல்லாத பிற நோய்கள் உள்ள, ஊரடங்கின் காரணமாக உடனடி மருத்துவ உதவி கிடைக்கப் பெற இயலாதவர்களுக்காக மருத்துவர்களால் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆலோசனை பெற்று பயன் பெறும் வகையில் இச்சேவை நடைமுறையில் உள்ளது. 
Image

இந்தியா முழுக்க உள்ள 180 மருத்துவர்கள் இணைந்து லாக்டவுன் கிளினிக் என்ற பெயரில்  இலவசமாக டெலிமெடிசன் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். டெலி மெடிசன் என்றால் நோயாளி நேரில் செல்ல வேண்டியதில்லை. வாட்ஸப்பைப் பயன்படுத்தி ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஸ்பெஷலிஸ்ட்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.Neuro Surgery, Diabetology, cardiology, dermatology, Orthopedics, Pediatrics  வல்லுநர்கள் உள்ளார்கள். அயல்நாட்டிலிருந்தும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.  பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஆலோசனை இலவசம்

Lockdown Clinic For Non-COVID PatientsHealth Guide Online India ...

ஆலோசனை நேரம் : காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.
வாரத்தின் அனைத்து நாட்களிலும்.

* வாட்ஸ் அப் செயலி வழியாக தங்களது தகவல்களை +91 98408 76460 இந்த எண்ணுக்கு இந்த விவரங்களை அனுப்பவும்

1. பெயர்

2. வயது & பாலினம்

3. முக்கிய பிரச்சினைகள்

4. இருமல் அல்லது சளி அல்லது காய்ச்சல் இருந்தால் (நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறீர்களா அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா)

5. முன்பே இருக்கும் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால்

6. மருந்து ஒவ்வாமை

இந்த கோரிக்கையை அனுப்புவதன் மூலம் இந்த டெலி-ஹெல்த் ஆலோசனைக்கு எனது ஒப்புதல் அளிக்கிறேன்.

* தாங்கள் கொடுக்கும் விவரங்களை சரியாக குறிப்பிடவும்.விவரங்கள் போதுமானதாக இல்லை எனில் ஆலோசனை வழங்க இயலாது. (விவரங்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் சரியான ஆலோசனையை பெற முடியும்) 

* பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு-பெண்கள் நலம், குழந்தைகள் நலம்,கண்,காது-மூக்கு-தொண்டை பிரிவு, தோல் மருத்துவம், சிறுநீரக பிரிவு, நரம்பியல், இதயம்-நுரையீரல் மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மனநலம்,பல் மருத்துவம் என அனைத்து பிரிவு மருத்துவர்களும்  உள்ளனர். (MD,MS,DM,MBBS,MDS,BDS) தங்களது தேவையை பொறுத்து, மருத்துவர்களின் இருப்பை பொறுத்து 10 நிமிடங்கள் முதல் 3 மணி நேரத்தில், தங்களுக்கு வேண்டிய மொழியில் தகுந்த மருத்துவரிடமிருந்து  ஆலோசனை வழங்கப்படும்.

இச்சேவை அவசர சிகிச்சைக்கு பொருந்தாது.

*  கொரோனா சம்மந்தப்பட்ட சந்தேகங்கள், இரண்டாம் கட்ட ஆலோசனை, அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றை தவிர்க்க.( கவனிக்க - கொரோனா அல்லாத நோய்கள் )

* மருந்துகள் வழங்கும் சேவை கிடையாது.

* கட்டணம் கிடையாது.

அனுபவம்

என் நண்பர் ஒருவருக்குக் கைவிரல் ஒன்றில் சிறுகாயம். அதன் அருகில் தொற்று. அவர் வலியால்  துன்பட்டுக் கொண்டிருந்தார்

குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸப் அனுப்பினார். கையில் காயம் தொற்று மருத்துவம் வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்
அடுத்த சில நொடியில் பதில் வந்தது. உங்கள் பெயர், வயது, பாலினம், என்ன பிரச்சினை, ஏற்கனவே உடலில் இருந்துவரும் பிரசினைகள், இப்போது என்ன மருந்துகள் சாப்பிட்டு வருகிறீர்கள் என்ற விவரங்களையும் டெலிமெடிசன் ஆலோசனைக்கு சம்மதிக்கிறேன் என்ற உறுதி மொழியையும் அனுப்புங்கள் என்று பதில் வந்தது.  அவரும் அந்தத் தகவல்களையும், அவற்றுடன் கைப் புண்ணை படம் எடுத்து இணைத்தும் அனுப்பினார்.

அடுத்த சில நிமிடங்களில் பதில் வந்தது. உங்கள் பிரசினை ஒரு தோல் மருத்துவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரே நேரே உங்களைத் தொடர்பு கொள்வார். அதற்கு 10 நிமிடத்திலிருந்து 3 மணி நேரம் ஆகலாம். உங்கள் படம் தெளிவாக இல்லை. வேறு அனுப்ப முடியுமா பாருங்கள்  என்று பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது

சுமார் 2 மணி நேரம் கழித்து தோல் மருத்துவரே நேரே பதில் அனுப்பினார். முதல் வரி நீங்கள் டயபெட்டிக் என்பதால் தொற்றை அலட்சியப்படுத்ததீர்கள் என்று இருந்தது. பின் மருத்துகளையும் அதை எந்தெந்த வேளையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அவ்வளவுதான் பிரசினை தீர்ந்தது. பத்து பைசா செலவில்லை!

யார்?

இந்த முயற்சியை முன்னெடுத்திருப்பவர் டாக்டர் பிரகாஷ் அய்யாத்துரை என்ற ராமச்சந்திரா மெடிக்கல் சென்டரைச் சேர்ந்தவர்.

தொடர்புக்கு:

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840876460, 
(வாட்ஸப் செய்தி மாத்திரம். தட்டச்சு செய்ய முடியாதவர் குரல் வழிச் செய்தியைப் பதிவு செய்யலாம் (Voice Message). போனில் அழைக்க வேண்டாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top