0
செஸ் விளையாட்டை விளையாடதவர்களே இல்லை எனலாம். எவ்வளவோ கம்யூட்டரில் செஸ் விளையாட்டு இருந்தாலும் இந்த வார் செஸ் மற்றதிலிருந்து மிகவும் வேறுபட்டது. முதலில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். பதிவிறக்கம் செய்தபின் கேம் ஒப்பன் செய்யவும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில நியூ கேம் என்பதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து
ஓப்பன ஆகும் விண்டோவில் நீங்கள் எங்கு விளையாட
போகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
(காடு,பாலைவனம் போன்று)அதைப்போலவே
விளையாட்டு சுலபமாகவா கடினமாகவா
என்பதனையும் தேர்வு செய்யுங்கள்.
நான் காடு தேர்வு செய்துள்ளேன்.இப்போது
கீழ்கணட் விண்டோ ஓப்பன ஆகும்.

இதில் இரண்டு சேஸ் போரட்கள் இருக்கும். ஒன்று
உண்மையான உருவத்துடனும் மற்றோன்று செஸ்
காய்களுடனும் இருக்கும். இதில் நமது வெள்ளை நிறம்.
இப்போது விணடோவில் தோற்றும் செஸ் காயினை
நாம் கர்சர் கொண்டு நகர்த்த வேண்டும.(செஸ்
விதிமுறைகளுக்கு ஏற்ப காயினை நகர்த்த வேண்டும்)
காயினை நகர்த்த நகர்த்த இதில் உள்ள உருவங்கள்
இன்னிசையுடன் நகர்வதை காணலாம்.நமது வெள்ளை
குதிரை பறந்து சென்று அமர்வதை கீழே உள்ள
விண்டோவில் பாருங்கள்.
நமது சேனாதிபதியும் நகர் வதை காணுங்கள்.
நமது மந்திரி ( இளவரசி)கொள்ளை அழகு.அதைப்போல
யானை நகரும் போதும் அழகான இன்னிசை கேட்கும்.
சில வருடங்களுக்கு முன் இந்த விளையாட்டை இரவில்
நான் விளையாடும் சமயம் ஒலி அளவை அதிகமா
க வைத்து விளையாடினேன். ஒரு கட்டத்தில் நமக்கே
பயமாக வந்தது. விளையாடி பாருங்கள்.இறுதியாக
யார் விளையாட்டில வெற்றி பெறுகின்றார்களோ
அப்போது சுழுல் காற்று வந்து மொத்த நபர்களையும்
அடித்து செல்லும். கீழே பாருங்கள் .கம்யூட்டர் வெறறி
பெற்ற பின் வந்த புகைப்படம்

கருத்துரையிடுக Disqus

 
Top