0
பிறந்தநாள்.திருமணநாள். புத்தாண்டு என அனைத்திற்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம். அந்த வாழ்த்து அட்டைகளை நாமே தயாரிக்கும் முறையை இன்று காணலாம். இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் நீங்கள் புதிய கார்ட் தயாரிக்கவும். தேவையான அளவினையும் தேவையான ரெசுலேஷனையும் நீங்களே உங்கள் தேவைக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளுங்கள்.
இதன் இடதுபுறம் செலக்ட் பிக்ஸர் இருக்கும் அதனை கிளிக செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட டிசைன்கள் கிடைக்கும் உங்களுக்கு தேவையான டிசைனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
தேவையான படம் தேர்வு செய்ததும் வேண்டிய கிளிப் ஆர்ட் தேர்வு செய்யவும்.
நான் தேர்வு செய்துள்ள படத்தை பாருங்கள்.
இதன் மேல் புறம் உள்ள டெக்ஸ் தேர்வு செய்து தமிழிலும் தகவல்கள் சேர்க்கலாம். இதில் Greeting என்பதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட பொருளில் உங்களுக்கு Happy Birthday.New Year.Wedding Anniversary.Mother's Day,Father's Day.Thankyou.Love Notes.Friends Notes என தேவையானவை உள்ளது. நீங்கள் எந்த சப்ஜேட்டுக்காக தகவல் அனுப்ப போகின்றீர்களோ அதை தேர்வு செய்யவும்.
நான் நியு இயர் தகவலை தேர்வு செய்துள்ளேன். வேண்டிய வாக்கியம் தேர்வு செய்து அதில் உள்ள காப்பி கிளிக் செய்யவும்.
அனைத்தும் ஓ.கே. செய்ததும் வந்துள்ள கிரீட்டிங் கார்டினை கீழே பாருங்கள்.கார்டடுக்கு பார்டரும் விரும்பிய டிசைனில் நாம் போட்டுக்கொள்ளலாம்.

நேரடியாக பிரிண்டடும் எடுக்கலாம். அதைப்போல வேண்டிய பார்மெட்டில் சேமித்தும் நாம் வைத்துக்கொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top