0
வாட்டர் மார்க் சாப்ட்வேர் பற்றி நாம் ஏற்கனவே நிறைய சாப்ட்வேர்கள். பார்த்திருக்கின்றோம்.மற்றது மாதிரி இல்லாமல் இது சற்றே புதுமாதிரியாக உள்ளது.7 எம்.பி. கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒரே ஓரு புகைப்படம் ஆக இருந்தால் அந்த புகைப்பட பைலையும் அதிக படங்கள் இருந்தால் அதனுடைய போல்டரையும் தேர்வு செய்யவும்.ஒரே ஒரு புகைப்படம் தேர்வு செய்ததும் வந்துள்ள விண்டோ கீழே-
நிறைய படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்ததும் வந்துள்ள படம் கீழே-
இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்தபின்னர் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும். அதில் படத்திற்கு தேவையான எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யலாம்.

இதில்உள்ள டெக்ஸ்ட் செட்டிங் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான எழுத்தின் அளவு - வகை - வண்ணம் - அமைப்பு என அனைத்தையும் தேர்வு செய்யவும்.

எழுத்து தட்டச்சு செய்ததும் வந்துள்ள விண்டோவின் படம் கீழே-

ஒ.கே. கொடுத்து அடுத்து பக்கம் செல்லவும.இதில் 9 வகையான படங்களின் தொகுப்பு உள்ளது. அதில் நாம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
இதில் கீழே உள்ள Browse -ப்ரவுஸ் கிளிக் செய்து கம்யூட்டரில் உள்ள நமக்கு விருப்பமான படத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.படத்தை வேண்டிய அளவு டிரான்ஸ்பரன்ட் செய்துகொள்ளலாம். இதில் பார்ட்ர் அமைக்கும் வசதியும் உள்ளது. தேவையான டிசைனையும் தேவையான அளவினையும் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள் படத்திற்கு வேண்டிய பெயரினை கொடுக்கலாம். எல்லாம் செய்து முடித்ததும் இறுதியாக ரன் கொடுத்து வேண்டிய இடத்தில் சேமிக்கவும். பதிவு போடுபவர்கள் குறிப்பாக சமையல் குறிப்பு போடுபவர்கள் இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்

கருத்துரையிடுக Disqus

 
Top