0
பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் சத்தம் போடாமல் பக்கத்து சீட் நண்பனுடன் விளையாடும் விளையாட்டு இது. கோடுபோட்ட நோட்டு புத்தகத்தில் புள்ளிகள் வைத்து பின்னர் அதை கோடுகளால் இணைத்து ஒரு கட்டம் உருவாக்கி நாம் உருவாக்கும் கட்டத்திற்கு நமது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக வைத்து விளையாடியிருப்போம். யார் பெயரின் இனிஷியல் அதிகமாக உள்ளதோ அவரே வெற்றிபெற்றவராவர். படிக்கும் சமயம் விளையாடிய விளையாட்டினை இப்போது கணிணியில் விளையாடலாம். என்ன வித்தியாசம்....அருகில்தான் அருமை நண்பன் இல்லை. கம்யூட்டரையே நண்பனாக நினைத்து விளையாடிட வேண்டியதுதான். இந்த சின்ன சாப்ட்வேரை 176 KB பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விளையாட்டினை நாம் முதலில் விளையாடிட வேண்டுமா ? அல்லது கம்யூட்டர் விளையாடிட வேண்டுமா என முடிவு செய்யுங்கள்.
புள்ளிகளை இணைத்து கோடு வரையுங்கள் முதலில் யார் ஆரம்பிக்கின்றார்களோ அவர்களுக்கு சிகப்பு நிற கோடு கிடைக்கும். புள்ளிகளை இணைத்துகொண்டோ வாருங்கள். உங்களால் ஒரு கட்டம் உருவாகியது என்றால் YOU என்றும் கம்யூட்டரால் உருவாகியது என்றால் ME பெயர் வரும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நான் விளையாடிய சமயம் கம்யூட்டர் தான ஜெயித்தது. அது 12 பாயிண்ட். நான் 4 பாயிண்ட்.
குழந்தைகளுக்கு விளையாட கொடுங்கள். ஜாலியாக விளையாடி கொண்டிருப்பார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top