0

Easy way to make our family tree and any one find the relationship in the family......
இதில் உள்ள Download கிளிக் செய்து பின் கணிணியில்

இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இந்த

சாரளம் ஓப்பன் ஆகும்.



இதில் மேற்புறம் உள்ள Option கிளிக் செய்து அதில்

மொழியை தேர்வு செய்யவும். நான் ஆங்கிலம்

தேர்வு செய்துள்ளேன்.



நீங்கள் இந்த சாப்ட்வேர் உபயோகிக்கும் முன்

உங்கள் உறவினர்கள் புகைப்படம்-பிறந்ததேதி-

பிறந்த இடம்-திருமண நாள்- இறந்திருந்தால்

இறந்த தேதி- இறந்த காரணம் - என அனைத்தையும்

தனியே குறித்துக்கொள்ளுங்கள். இனி இதில்

எப்படி உறவுகளை சேர்ப்பது என பார்ப்போம்.

உங்கள் தாத்தா(தந்தையின் தகப்பனார்)

விலிருந்து ஆரம்பியுங்கள்.இதில் வலப்புறம்

உள்ள Person -என்கிற காலத்தின் கீழ் உள்ள

+ Create என்பதை கிளிக் செய்யவும்.


இதில் Male என்பதை தேர்வு செய்தால் உங்களுக்கு

கீழ்கண்ட வாறு காலம் ஓப்பன் ஆகும்.



இதில் உள்ள புகைப்பட காலத்தை கிளிக் செய்து

உங்கள் கணிணியில் உள்ள் புகைப்படத்தை

(உங்கள் தாத்தாவின் புகைப்படததை)

தேர்வு செய்யவும். அடுத்து அவரின்

Surname-First name - Middle Name தேர்வு

செய்யவும். அவரின் பிறந்த தேதி

தெரிந்தால் அதில் குறிப்பிடவும்.

பின் அதில் உள்ள Event கிளிக் செய்யவும்.


இதில் உள்ள Calender கிளிக் செய்தால் உங்களுக்கு

அந்த நாளின் கிழமை தெரியும்.



பின் ஓகே கொடுத்து வெளியேறவும். பின்னர் அதில்

உள்ள Occupation-ல் அவரை பற்றிய விவரங்களும்-

Commant-ல் அவரைப்ற்றிய குறிப்புகளையும்

குறித்துக்கொள்ளுங்கள். ஓகே கொடுக்கவும்.

இப்போது மெயின் காலத்தில் நீங்கள் கொடுத்த

விவரங்களுடன் அவர் பெயர் வந்துவிடும். இனி

அவர் பெயர் மீது வைத்து மீண்டும் கிளிக் செய்யவும்.



இப்போது மேற்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.

அதில் Wife என்பதை கிளிக் செய்யவும்.

மீணடும் உங்களுக்கு இந்தமாதிரி சாரளம் ஓப்பன்

ஆகும்.


முன்பு செய்த மாதிரி இதிலும் விவரங்கள் சேர்க்கவும்.

ஓகே கொடுத்து வெளியேறவும். மீண்டும் பழையபடி

முதல் நபரை தேர்வு செய்து மகன் - மகள் - சகோதரன்-

சகோதரி விவரங்கள் சேர்க்கவும்.உதாரணத்திற்கு

இப்போது நீங்கள் உங்கள் தாத்தாவின் பெயரை

சேர்த்தீர்களே ஆனால் அடுத்து உங்கள் பாட்டியின்

பெயர் - உங்கள் தாத்தாவின் உடன் பிறந்தவர்கள்

(உங்கள் சின்ன தாத்தா) - உங்கள் தாத்தாவின்

மகன்கள் - மகள்கள் - அடுத்து மகன்களின்

மனைவி - குழந்தைகள் என அடுத்தடுத்து

விவரங்களை கொடுத்துக்கொண்டே சொல்லுங்கள்.



அனைத்து உறுப்பினர்களை யும் சேர்த்ததும் உங்களுக்கு

மேற்கண்டவாறு சாரளம் கிடைக்கும். அனைத்து

உறவினர்களை யும் சேர்த்தாகிவிட்டது்.இனி

என்ன செய்யலாம். இதில் வலப்புறம் உள்ள

Person கீழ் உள்ள காலத்தில் முதலில் உள்ள

Activation கிளிக் செய்தால் நீங்கள் குறிப்பிட் ட

நபரின் விவரங்கள் தெரியும்.


அடுத்து அதன் கீழ் உள்ள Built Tree கிளிக் செய்தால்

உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தெரியும்.


இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் நீங்கள்

யாரை தேர்வு செய்து Build Tree கிளிக் செய்கிறீர்களோ

அவருக்கு மற்றவர்கள் என்ன உறவு என சுலபமாக

இதில் அறிந்து கொள்ள முடியும்.

இதை பிரிண்ட் எடுக்கும் வசதியும்

உள்ளதால் அழகாக பிரிண்ட் எடுத்து வைத்துக்

கொள்ளலாம்.

இதில் உள்ள Statics கிளிக் செய்தால் கீழ்கண்ட

சாரளம் உங்களுக்கு ஓப்பன் ஆகும்.


உறவின் வலிமையை அறிந்துகொள்ளுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top