இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன்.
இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன்
சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும்,
நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன்,
ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர,
கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.
இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்

Rajendra
Chola I was the son of Rajaraja Chola I and was one of the greatest
rulers of Tamil Chola dynasty of India. He succeeded his father in
1014CE as the Chola emperor. During his reign, he extended the
influences of the already vast Chola empire up to the banks of the river
Ganges in the north and across the ocean. Rajendra’s territories
extended coastal Burma, the Andaman and
Nicobar Islands, Lakshadweep, Maldives, conquered the kings of Srivijaya
(Sumatra, Java, Malaysia, Singapore, Indonesia, Thailand, Cambodia in
South East Asia) and Pegu islands with his fleet of ships. He defeated
Mahipala, the Pala king of Bengal and Bihar, and to commemorate his
victory he built a new capital called Gangaikonda Cholapuram
கருத்துரையிடுக Facebook Disqus