இன்றைக்கு
கோவை நகரம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய தொழில் நகரமாக மாறக் காரணமாக
இருந்தவர்தான் டெக்ஸ்டூல் பாலசுந்தரம். 1913-ம் வருஷம் ஆகஸ்ட் 31-ம் தேதி
ஆவரம்பாளையத்தில் பிறந்தார் பாலசுந்தரம். இவரது அப்பா அந்த பகுதியில் மிகப்
பெரிய மிராசுதாரர். அந்த ஊரின் மானியக்காரராகவும் இருந்தார்.
அவரிடம் மட்டுமே சுமார் நான்காயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. அன்றைய தேதியில் இத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்த மிராசுதாரர்களை கோவை பகுதியில் விரல் விட்டு எண்ணிவிடலாம். பாலசுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். அண்ணன்கள் இருவரும் ஓரளவுக்குப் படித்து, விவசாயம் செய்து வந்தனர். ஆனால், பால சுந்தரத்தை மட்டும் நன்றாகப் படிக்க வைத்தார் அவரது அப்பா.
பள்ளிப் படிப்பை கோவை யில் முடித்த பாலசுந்தரம், இன்டெர்மீடியட் படிப்பை சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தார். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக இங்கிலாந்தில் இருக்கும் ஷெப்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது ஷெப்ஃபீல்ட் பல்கலைக்கழகம் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிப்பிற்காக உலகப் புகழ் பெற்று விளங்கியது.
இன்ஜினீயரிங் படித்து முடித்த பிறகு இங்கிலாந்திலேயே இருந்த மெட்ரோபாலிட்டன் விக்கர்ஸ் என்னும் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் அப்ரன்டிஸாக வேலை பார்த்தார். இந்த நிறுவனம் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களையும் தயாரித்தது. மேட்டூர் அணை யில் நீர் மின்சாரம் தயாரிக்கத் தேவையான இயந்திரங்கள் பாலசுந்தரம் அப்ரன்டிஸாக இருந்தபோது அந்த நிறுவனத்தில் தயாரானது சுவாரஸ்யமான விஷயம்.
இரண்டாண்டு கால தொழில் பயிற்சியை முடித்துவிட்டு, 1937 வாக்கில் கோவை திரும்பினார் பாலசுந்தரம். ஜி.டி.நாயுடுவின் நேஷனல் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இங்குதான் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் இயந்திரத்தை 1939-ல் அவர் உருவாக்கினார். இதுதான் இந்தியாவிலேயே மின்சாரம் மூலம் இயங்கிய முதல் மோட்டார் இயந்திரம். இதற்குப் பிறகுதான் இந்தியாவிலேயே பலவிதமான மோட்டார்கள் தயாராகத் தொடங்கியது.
1944-ல் டெக்ஸ்டைல் மில்களுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயார் செய்யும் கோயமுத்தூர் இன்ஜினீயரிங் அண்ட் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார். திடீரென அவர் கவனம் டெக்ஸ்டைல் துறை மீது பதிந்ததற்கு காரணமில்லாமல் இல்லை. அந்த சமயத்தில் தமிழகத்தில் பல டெக்ஸ்டைல் மில்கள் இருந்தன. 1947 வாக்கில் கோவை, சேலம் பகுதியில் மட்டும் 32 டெக்ஸ்டைல் மில்கள் இருந்தன. இது தவிர மதுரை, தூத்துகுடி, பாபநாசம் என தென் மாவட்டங்களிலும் மிகப் பெரிய டெக்ஸ்டைல் மில்கள் இருந்தன. கோவை, சேலம் பகுதியில் இருந்த டெக்ஸ்டைல் மில்களில் பாதி நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பிஸினஸ்மேன்களிடம் இருந்தன.
இந்த மில்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், இயந்திரங்கள் அனைத்துமே வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. டெக்ஸ்டைல் இயந்திரங் களுக்குத் தேவையான ஒரு நட்டு, போல்ட் உடைந்து போனால் கூட, அதை வெளிநாட்டில் ஆர்டர் தந்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். வெளிநாட்டிலிருந்து அந்த பாகம் இங்கு வந்து சேர காலதாமதமானதால், உற்பத்தியும் பாதிப்படைந்தது.
இந்த காலதாமதத்தை தடுக்க, டெக்ஸ்டைல் மில்களுக்கான இயந்திரத்தை நாமே ஏன் கோவையில் தயாரிக்கக்கூடாது என்று பாலசுந்தரம் நினைத்ததன் விளைவுதான், மேற்சொன்ன கோயமுத்தூர் இன்ஜினீயரிங் அண்ட் டிரேடிங் நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த உதிரிபாகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, 1946-ல் டெக்ஸ்டூல் நிறுவனம் பிறந்தது. ஆரம்பத்தில் வெறும் ஏழு தொழிலாளர்களுடன் ஆரம்பமானது டெக்ஸ்டூல் நிறுவனம்.
தொடக்கத்தில் சின்னச் சின்ன பாகங்களைத்தான் தயாரித்தார். ஆனால், அதற்கே நல்ல வரவேற்பு இருந்தது கண்டு, விரைவிலேயே ஒரு முழுமையான இயந்திரத்தைத் தயாரித்தார் பாலசுந்தரம். திண்டுக்கல்லில் இருந்த சௌந்தர்ராஜா மில் அந்த இயந்திரத்தை உடனடியாக வாங்கிக் கொண்டு போனது.
வெறும் டெக்ஸ்டைல் துறையோடு நின்றுவிடாமல் இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க துப்பாக்கிகளையும் தயாரித்து தந்தது. டெக்ஸ்டூல் நிறுவனத்தில் இதற்கென ஒரு தனிப்பிரிவு தொடங்கப்பட்டு ஸ்டென்கன், போரில் பயன்படுத்தும் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டது. 1955 வாக்கில் விவசாயத்திற்கான பம்ப் செட்டுகளையும் டீசல் மூலம் இயங்கும் மோட்டார்களையும் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து பத்தே ஆண்டு களில் இந்நிறுவனம் பல்வேறு பிரிவுகளாக வளர்ச்சி அடைந்து, இங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது.
1958-ல் பிக் அயர்னுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட, அதையும் தனது தொழிற்சாலையிலேயே தயாரிக்கத் தொடங்கினார் பாலசுந்தரம். இதற்குத் தேவையான அனைத்து இயந்திரங்களையும் உள்ளூரிலேயே தயாரித்ததோடு, நாளன்றுக்கு 50 டன் இரும்பை உற்பத்தி செய்தார். இதன் விளைவாக, 1959-ல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தைத் தோண்டி மண்ணை வாரி எடுக்கும் இயந்திரத்தைத் தயாரித்து அளிக்கும் ஆர்டரும் கிடைத்தது. வெளிநாட்டு நிறுவனங்களைவிட மிகத் தரமாக இந்த இயந்திரத்திற்கான பாகங்களைத் தயார் செய்து தந்தார் பாலசுந்தரம்.
ஆனால், இந்த இயந்திரங் களுக்குத் தேவையான பாகங் களைத் தயாரிக்கிற வேலையை கோவையில் இருக்கிற சிறிய லேத் ஃபாக்டரிகளுக்குத் தந்தார். அவர் காலத்திலேயே இருநூற்றுக்கும் மேற்பட்ட லேத் ஃபாக்டரிகள் கோவை யில் உருவாயின. இன்றைக்கு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஆன்ஸிலரி யூனிட்டுகள் கோவை யில் அதிக அளவில் இருக்கக் காரணம் பாலசுந்தரம்தான்!
கிட்டத்தட்ட இருபதாண்டு காலம் பிரமாதமாக நடந்தது டெக்ஸ்டூல் நிறுவனம். 1965-ம் ஆண்டு வாக்கில் உலக அளவில் டெக்ஸ்டைல் துறையில் தொழில் நெருக்கடி ஏற்பட, டெக்ஸ்டைல் மில்களுக்குத் தேவையான இயந்திரங் களுக்கான ஆர்டர் குறைந்தது. இந்த சமயத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டே கார் தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டார் பாலசுந்தரம். அதோடு, டிராக்டர் தயாரிக்கும் பணியிலும் வெற்றி பெற்றார்.
ஆனால், டெக்ஸ்டைல் துறைக்குத் தேவையான இயந்திரங்களுக்கான ஆர்டர்கள் இல்லாததால், நிறுவனத்தின் வருமானம் குறைந்தது. இதனால் உற்பத்தியை நிறுத்திவிட்டு, நிறுவனத்தை மூட வேண்டிய கட்டாயம் அவருக்கு.
என்றாலும் 1970-க்கு பிறகு டெக்ஸ்டைல் துறை மீண்டும் சீரடைந்து, டெக்ஸ்டூல் நிறுவனத்திற்கு புதிய ஆர்டர்கள் கிடைத்து, பழையபடி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தாலும், பாலசுந்தரம் அந்நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் நன்றாகச் செயல்பட்டாலும், 1984-ல் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம், டெக்ஸ்டூல் நிறுவனத்தை வாங்கி அதனுடன் இணைத்துக் கொண்டது. இன்றைக்கு டெக்ஸ்டைல் இயந்திரங்கள் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமாக இருக்கிறது லட்சுமி மெஷின் ஒர்க்ஸ்.
பாலசுந்தரத்திற்கு ஒரே மகன் ஜெயச்சந்திரன். ஜெர்மனியில் படித்த இவர், வாகனங்களுக்குத் தேவையான டீசல் மோட்டார் இன்ஜின்களை தயாரிக்கும் ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இன்றைக்கு இவரது மகன் ஆனந்த் இந்நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
கோவையை தென் இந்தியாவில் இன்ஜினீயரிங் தொழிலுக்கான கேந்திரமாக மாற்றிய பாலசுந்தரம், நாயுடு சமூகத்தின் மிகப் பெரிய பங்களிப்பு. தான் பிறந்த சமூகத்திற்கு பல பெருமைகளைச் சேர்த்த பாலசுந்தரத்தை கோவை நகரம் என்றும் மறவாது.

கருத்துரையிடுக Facebook Disqus