0
தீண்டாமையை தீயாய் சுட்டெரித்தவரே !
தொண்டாய் அரசியலை வழிவகுத்தவரே !
தாழ்த்தப்பட்ட இனத்தில் படித்த முதல் மாணவரே !
பள்ளியில் கிடைத்த அவமானத்தில்
தீண்டாமை பற்றி சிந்தித்தவரே !
தீண்டாமை ஒரு பாவ செயல் என்று
பள்ளிப் புத்தகங்களில் அச்சடித்தவரே
இந்திய சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தவரே!
இந்திய மக்களுக்கு உத்வேகமாய் இருந்தவரே !
மூவெட்டாய் ஒரு நாளை வகுத்து வாழந்தவரே !
மக்களுக்காக உணர்மிகுந்த சட்டத்தை எழுதியவரே !

இன்று மனித இனம் இறக்காமலிருப்பதற்கு
உயிர் கொண்டு புதிய சட்டங்கள் எழுத வாருமய்யா
உங்கள் வரவுக்காக
சில சட்டங்கள் மாறாமல் இருக்குதைய்யா !

கருத்துரையிடுக Disqus

 
Top