புதிய சோலார் மொபைல் சார்ஜரைத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயவீரபாண்டியன் உருவாக்கி உள்ளார்.
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவீரபாண்டியன்.
இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார்.
சிறிய அளவிலான
பிளாஸ்டிக் டப்பாவின் மேற்புறத்தில்
சோலார் பேனல் பதிக்கப்பட்டு,
அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் இந்தப் பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது.
இதில் இருந்து உரிய பிளக் மூலம்
செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார்.
இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் கூட, சோலார் பேனலில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது.
இதற்கு சூரிய ஒளி மாத்திரம் அவசியம் இல்லை. அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் மொபைல் சார்ஜ் ஏறும் என்கிறார் ஜெயவீரபாண் டியன்.
இது குறித்து ஜெயவீரபாண்டியன் கூறுகையில்,
இந்த வகையான சார்ஜரை உருவாக்க எனக்கு ரூ.100 மட்டுமே செலவானது. கடையில் கிடைக்கும் சாதாரண பேட்டரி, கன்டன்சர் போன்ற பொருட்களை வைத்துத்தான் இதனை உருவாக்கினேன்.
செல்போன் வாங்கும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதனை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் சார்ஜ் பிரச்னை என்பதே இல்லாமல் போகும். மின்சாரமும் மிச்சப்படும் என்றார்.

கருத்துரையிடுக Facebook Disqus