கீரில் இல்லாமல் செய்யும் சுவையான சிக்கன் டிக்கா
தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்.
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
சிக்கன் மசலாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தயிர் -1/2 கப்
கலர் பவுடர் - சிறிது
லெமன் ஜூஸ்- 1/2 மூடி
செய்முறை:
மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக சிக்கனில் கலந்து 2,3 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு மண் சட்டியில் நெருப்பு கறியினை போட்டு தணல் செய்யவும்.
ஒரு இரும்பு கம்பியில் சிக்கனை வரிசையாக சொருகி இதன் மேலே எண்ணெய் / நெய் ஊற்றி சுற்றி வரை தணலில் சுட்டு எடுக்கவும்.
சிக்கன் வேகும் வரை திருப்பி திருப்பி அணலில் காட்டவும்.. சுவையான சிக்கன் டிக்கா ரெடி
கருத்துரையிடுக Facebook Disqus