உத்தரப்பிரதேச அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும்
அவற்றைச் சுற்றி உள்ள கடைகளில் ஜங்க் ஃபுட் (Junk food) வகையில் வரும்
உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளது.
டெல்லியிலிருக்கும் 'அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு' (CSE),
நொறுக்குத்தீனிகள், சிப்ஸ், இனிப்பு வகைகள், நூடுல்ஸ், கோழிக்கறி உணவுகள்
என்று மிகபிரபலமான நிறுவனங்களின்
தயாரிப்புகளை ஆய்வு செய்து, 'இவையெல்லாம் குழந்தைகள் சாப்பிடுவதற்கு
ஏற்றதல்ல' என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முக்கியமாக குழந்தைகள்
விரும்பி சாப்பிடும் பலவகையான ரெடிமேட் உணவுப் பொருட்களையும் ஆபத்தானவை
என்று பட்டியலிட்டுள்ளது அந்நிறுவனம். இதன் அடிப்படையில்தான் உத்தரபிரதேச
அரசு இப்படியொரு தடையை விதித்துள்ளது. இதைப் பின்பற்றி இந்தியா முழுக்கவே
இப்படியொரு தடையை விதித்தால்தான்... எதிர்கால இந்தியாவைக் காப்பாற்ற
முடியும்!பெற்றோர்களே... அரசாங்கம் தடை போடுவது ஒருபக்கம்
இருக்கட்டும். நீங்கள் முதலில் தடை போடுங்கள். இன்றைய அவசர யுகத்தில்
சமைத்துக் கொடுக்ககூட நேரமில்லாமல்... ரெடிமேட் உணவுகளை வாங்கிக் தந்து
கொண்டிருக்கிறோம். அவையெல்லாம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கே வேட்டு
வைக்கும் வெடிபொருட்கள் என்று இனியாவது உணருங்கள். முடிந்தவரை... வீட்டில்
தயாரிக்கும் உணவுகளையே குழந்தைகளுக்குக் கொடுக்க முயற்சி
கருத்துரையிடுக Facebook Disqus