0


சிக்கன் நூடுல்ஸ் செய்யத்தேவையான பொருட்கள்:
சிக்கன் - 150கிராம் (போன்லெஸ்)
நூடுல்ஸ் - 1(பெக்கெட்)
முட்டை - 1
வெங்காயம் -1
இஞ்சிபூண்டு பேஸ்ட் -1ஸ்பூன்
கேரட், பீன்ஸ்,கோஸ் - 1கப்
மிளகுத்தூள் - 3ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

முதலில் காய்கறிகளை எல்லாம் பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்...
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போடவும் அதில் தேவைக்கு தண்ணீர் ஊற்றவும் அதில் 1 ஸ்பூன் மிளகுத்தூள் கொஞ்சம் உப்புத்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பிறகு தண்ணீரை தனியாக வடித்து சிக்கனை மட்டும் சின்ன சின்ன துண்டுகளாக கரண்டி வைத்து பிரித்துவிடவும்.

இந்த சிக்கன் தண்ணீரில் நூடுல்ஸ் போட்டு வேக வைத்து தனியாக வைக்கவும்..

கடாயில் முட்டை , 1ஸ்பூன், கொஞ்சம் உப்பு போட்டு பொறித்து கிண்டிவிடவும்..

வேறு ஒரு கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய காய்கறிகள், சிக்கன் துண்டுகள் சேர்த்து முடி போட்டு வேகவிடவும்.
காய்கறிகள் வெந்தபின்பு நூடுல்சை சேத்து கிளரவும். இதனுடம் முட்டையினை சேர்க்கவும்..

சுவையான நூடுல்ஸ் ரெடி..

கருத்துரையிடுக Disqus

 
Top