0

ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்து அளித்த பேட்டி.

இறைவனிடம் ஈடுபாடு அதிகமான நேரத்தில் இசையின் பக்கத்திலும் எனக்கு முன்னேற்றங்கள் வரத் தொடங்கின. நிறைய வாய்ப்புகள் வந்தன.

1987 -ல் மலேசியா, சிங்கப்பூர் போகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே இசை சம்பந்தமான சில எலக்ட்ரானிக் சாதனங்களைப் பார்த்தேன். அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்து சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவோ சாதிக்க முடியும்னு தெரிந்தது.
அதுதான் என்னோட மூலதனம். அதை வைத்துத்தான் என் தொழிலையே ஆரம்பிக்க முடியும். எனவே வீட்டில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் விற்று பணம் வாங்கிப் போய் அந்த இசை சாதனங்களை வாங்கி வர ஏற்பாடு செய்தோம்.

முட்டுக்கட்டை

எனது வளர்ச்சியால் தங்களுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என நினைத்த சிலர் இதுக்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை
போட்டார்கள்.

அப்போது என் மனம் உடைந்து போகும் அளவுக்கு நிறைய இடைஞ்சல் செய்தார்கள். சுங்கஇலாகாவில் சிலர் என்னை ரொம்பவே கேவலமாக நடத்தினாங்க.

அந்த நேரத்தில் தினம் விமான நிலையத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இப்படி தவித்தேன். நல்லவேளை எங்க அப்பாவோட சில நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.

அத்தனை அவஸ்தைகளுக்கு பிறகு கஷ்டப்பட்டு இசை சாதனங்களை மீட்டு வந்து வீட்டில் இறக்கினோம். இறைவன் மிகப்பெரியவன். அவன் கொடுக்க நினைத்தால் எவரால் தடுக்க முடியும்? என்கிறார் ரகுமான்.

மகன் இரவில் தூங்காமல் இசைக் கருவிகளைக் கொண்டு பலவித இசைகளை இசைத்த நேரத்தில் அம்மா – கோவில், தேவாலயம், மஸ்ஜித் என்று சென்று தன் மகனுக் காகவும், குடும்பத்திற்காகவும் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தார்.


கருத்துரையிடுக Disqus

 
Top