மின்
கட்டண உயர்வால் தமிழகமே அதிர்ந்துபோய் நிற்கிறது. கொஞ்ச நேரமே மின்சாரம்
கிடைத்தாலும், ஓடோடிப் போய் லைட்டுகளை அணைப்பதும், ஃபேன்களை நிறுத்துவதுமாக
இருக் கிறார்கள் மக்கள். ஆனால், அமைச் சர்களின் வீடுகள் மின்தடையே
இல்லாமல், மின்கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எந்த நேர மும்
ஜொலிஜொலிக்கின்றன. அதுசரி, அவர்கள் நிம்மதியாக வேலை பார்த்தால்தானே, மக்கள்
குறைகளைத் தீர்க்க முடியும்?
சென்னை அடையாறு பகுதியில் பங்களா டைப்பில் இருக்கும் அரசு இல்லங்களில்தான் அமைச்சர்கள் குடியிருக்கிறார்கள். மிகப்பெரிய ஹால், கிச்சன், டைனிங் ஹால், ஆபீஸ் ரூம், ரீடிங் ரூம், ஜிம் என்று இரண்டு தளங்கள் வரையில் கட்டப்பட்ட தனித்தனி வீடுகளைச் சுற்றிலும் போதுமான இட வசதி உண்டு. அமைச்சர்கள் இல்லங்களின் முன்பு விசாலமான நிலப்பரப்பு, தோட்டம், போர்ட்டிகோ, கார் பார்க்கிங் வசதி எல்லாமே செவ்வனே அமைந்துள்ளன. அனைத்து அறைகளிலும் ஏசி வசதி இருக்கிறது. சில அமைச்சர் வீடுகளில் டாய்லெட், பாத்ரூமிலும் கூட ஃபேன் இருக்கிறதாம்.
இதற்கெல்லாம் பில் உண்டு என்றாலும் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்றால், கட்டணத்தை அமைச்சர்கள் செலுத்தப்போவது இல்லை. சைரன் கார், ஆடம்பர பங்களா, தனிப் பாதுகாப்பு அதிகாரி, எஸ்கார்டு என்று சகலமும் இலவசமாகக் கிடைப்பதைப்போலவே, மின்சாரக் கட்டணத்¬தயும் அரசேதான் ஏற்கிறது. மின்வெட்டு காரணமாக எரிச்சலில் வெந்துகொண்டு இருக்கும் மக்களுக்கு, அமைச்சர்களுக்கு மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருகிறது என்று தெரிந்தால், இன்னமும் எரியும்.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்சர்கள் எந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்தோம். கடந்த தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரத்தை எக்கச்சக்கமாகப் பயன்படுத்தியதில் முதல் இடத்தில் இருப்பவர் கருணாநிதி.ஐந்து ஆண்டுக் காலத்தில் கருணாநிதியின் கோபால புரம் இல்லத்துக்கு மின்சாரக் கட்டணமாக செலுத்தப்பட்ட தொகை 7.27 லட்சம். கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதில் ஐந்தாம் இடம். மின்சாரத்தின் அருமை தெரிந்ததாலோ என்னவோ, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு 12-வது இடம். ஐந்து ஆண்டுக் காலத்தில் அவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம்
4.22 லட்சம். பெண் அமைச்சர்களில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியது கீதாஜீவன், 4.17 லட்சம். சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனைவிட துணை சபாநாயகராக இருந்த வி.பி. துரைசாமி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். மிகக்குறைந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன் படுத்தியவர் உபயதுல்லா. ஐந்து ஆண்டுகளில் இவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம் 27,748. கடந்த தி.மு.க. ஆட்சியில் மட்டும் ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் சேர்த்து மின் கட்டணமாக 1.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்காகச் செலுத்தப்பட்ட மின் கட்டணம் 1.16 கோடி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வீட்டுக்கு மின்சாரக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. அந்தப் பணத்தை ஜெயலலிதாவே செலுத்தி விட்டாராம். முந்தைய இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணம், தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக Facebook Disqus