சுளுக்கு:-
கை கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் உப்பில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து பற்று போட குணமாகும்.
கட்டி, புண்:-
மாதுளை இலை, கொய்யா இலை இதில் எது கிடைக்கிறதோ அதை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கட்டி, புண் இவற்றில் தடவ குணமாகும்.
பல் வலி:-
மல்லிகை செடியின் இலையை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி குணமாகும்.
அரிப்பு , சேற்றுப்புண் :-
பாகற் கொடியின் இலை சாறை தேய்த்தால் அரிப்பு சேற்றுப்புண் சரியாகும்.
தொண்டைப் புண்:-
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து நெய்யில் குழைத்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட சரியாகும்.
சளி:-
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன் கலந்து கொடுக்கவும்.
நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள் செய்து ஒரு சிட்டிகை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.
அல்லது சிறிது கோதுமை மாவினை வாணலியில் வறுத்து அதைத் துணியில் கட்டி வைத்து, பொறுக்கும் சூட்டில், நெஞ்சு, முதுகு பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் கபம் இளகி வெளியேறும். தில்லியில் ஒத்தடம் கொடுப்பதை ”சிக்காய்” [SIKKAAI] என்று சொல்கின்றனர்.
இரத்த கட்டிற்கு
இரத்தக் கட்டிற்கு மஞ்சள் அரைத்து பற்று போட நல்லது.
குழந்தையின் அழுகையை நிறுத்த
குழந்தை அழுது கொண்டே இருந்தால் சந்தனத்தை நெற்றியில் பூச வேண்டும்.
தும்மல் நிற்க
தொடர்ந்து தும்மல் வந்தால் விபூதியைக் குழைத்து மூக்கில் தடவ வேண்டும்.
பித்த வெடிப்பிற்கு
பித்த வெடிப்பிற்கு சிறிது சுண்ணாம்பையும், விளக்கெண்ணையும் போட சரியாகும்.
வேர்க் குருவிற்கு
வேர்க் குருவிற்கு சாதம் வடித்த கஞ்சியை உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
தொண்டை வலி, சாதாரண ஜுரம்
ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், சிறிது இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் செய்து சர்க்கரை பால் சேர்த்து அருந்த தொண்டை வலி, சாதாரண ஜுரம் சரியாகும்.
பல் பிரச்சனை
மிளகுத் தூளும், உப்புத் தூளும் சேர்த்து பல் துலக்க ஈறில் இருந்து ரத்தம் வருவது நிற்கும்.
மிளகுத் தூளும், கிராம்புத் தூளும் ஒரு சிட்டிகை எடுத்து பல் வலிக்கும் போது தேய்த்தால் வலி குறையும்.
குழந்தையின் வாந்தி நிற்க
ஓமத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து கொடுக்க குழந்தையின் வாந்தி நிற்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus