0

ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதை விட ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்.
-செர்பியா

ஒரு நல்ல பெண்ணின் காலடியில் போலி பழி சொற்கள் மடிகின்றன.
தனி மனிதனுடைய அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் அவனுக்கு அமைந்த மனைவியே.
-ஸ்பெயின்

பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம்.பணம் குறைந்த வட்டியில் வெளியில் கிடைக்கிறது.
-ஸ்காட்லாந்து

ஒரு நல்ல பெண் ஏழு குழந்தைகளுக்கு மேல் .
-அர்மேனியா

கோடரியின் ஒரே வெட்டு மரத்தைச் சாய்க்க முடியாது ஆனால் காதலியின் ஒரே பார்வையில் மனிதனை சாய்க்க முடியும்.
-மெக்ஸிக்கோ

ஒரு பெண்ணுக்கு அவள் நடத்தையால் கவுரவம், நாக்குதான் ஒரு பெண்ணின் வாள் அது எப்போதும் துரு பிடிப்பதே இல்லை
-ஜப்பான்

ஆணை விட பெண்ணுக்கு பசி இரட்டிப்பு,புத்தி நான்கு மடங்கு,ஆசைகளோ எட்டு மடங்கு.
-இங்கலாந்து

நல்லவளாக இருப்பதை விட அழகியாக இருப்பதையே ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள்.
-ஜெர்மனி

மனைவியை தேர்ந்தெடுக்கும் போது கிழவனின் அனுபவமும் பார்வையும் வேண்டும் .
-அர்மேனியா

உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள்.உங்களுடைய ரகசியங்களை தாயிடம் மட்டுமே சொல்லுங்கள் .
-அயர்லாந்து

அழகிற்காக மட்டும் ஒரு பெண்ணை மணப்பவன்,அடித்திற்கும் பெயிண்டிற்காக மட்டும் ஒரு வீட்டை வாங்குபவன் ஆவான்.
-ஆப்ரிக்கா

பெண்ணிற்கு குணத்தைப் போல சிறந்த ஆபரணம் வேறில்லை,ஆனால் அவள் அதை அணிய வேண்டும்.
-டென்மார்க்

கருத்துரையிடுக Disqus

 
Top