Latest News

0
கேஸ் இல்லாமல் செய்யும் உணவு வகைகளுக்கு இயற்கை உணவு என்று சொல்வார்கள்.. இதில் சத்துக்கள் அதிகமாக இருக்கும்.

குறைந்த செலவில் கிடைக்கும் காய், கனிகளை வைத்து அடுப்பே இல்லாமல் அருமையான உணவுகள் தயாரிக்கலாம் வாங்க...


முளைப்பயிறு அவல் சாலட்: முளைகட்டிய பயிறு, ஊற வைத்த அவலுடன், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு , 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் கழித்து சாப்பிடவும்.. சுவையான சத்தான அவல் சாலட் ரெடி..


மருத்துவ குணங்கள்: உடலில் இருக்கும் வெப்பத்தினை தணிக்கிறது, மலசிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இந்த சாலட்டை சுகர்காரங்க சாப்பிடுவது நல்லது.


தக்காளி சாலட்: தக்காளியினை சின்ன சின்ன துண்டாக நறுக்கி அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.


வெள்ளரி , தயிர் சாலட்: திக்கான தயிரில் வட்டமாக நறுக்கிய வெள்ளரிக்காயினை போட்டு அதில் மிளகுத்தூள், உப்பு, சீரகத்தூள் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.. வெயில் காலத்துக்கு ஏற்ற சாலட் இது.

குளிர்ச்சியான சீரக பால்: சீரகம் - 1ஸ்பூன், தேங்காய்பால் - 1கப், வெல்லம் - தேவைக்கு, தண்ணீர் - 1கப் சீரகத்தை நன்றாக ஊற வைத்து அம்மியில் நைசாக அரைத்து எடுக்கவும் தண்ணீரில் வெல்லத்தினை உடைத்து போட்டு கரையவிடவும். இதனை தனியாக வடிக்கட்டி வைக்கவும். இதனுடன் தேங்காய்பால், சீரக பேஸ்ட் வெல்ல தண்ணீருடன் கலந்து ஃப்ரிஜில் வைத்து ஜில் என்று குடிக்கவும்.


மருத்துவ குணங்கள்: வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சி அடைய செய்யும், ஜீரன சக்தி கிடைக்கும், இரவில் சீரகப்பால் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.



நட்ஸ் லட்டு: துருவிய 1/2 கப் தேங்காயினை சிறிது நேரம் உலர வைக்கவும். இதனுடன் மெலிதாக அரிந்த பாதம் பருப்பு, முந்திரிபருப்பு, பேரிச்சம்பழம், வேர்கடலை, பிஸ்தா, பொட்டுக்கடலை, வாசனைக்கு ஏலக்காய் போட்டு ஒன்ரிரண்டாக உரலில் உடைத்துக்கொள்ளவும்.. பிறகு கைகளில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.. அதிக சத்துக்கள் நிறைந்த நட்ஸ் லட்டு தயார்..

மருத்துவ குணங்கள்: மெலிந்த குழந்தைகளுக்கு இந்த லட்டு ஒரு வரப்பிரசாதமாகும்..

ஹெல்ட் மிக்ஸ் பால்ஸ் : கடைகளில் கிடைக்கும் ஹெல்ட் மிக்ஸ் பவுடர்(வறுத்து பொடித்தது), இதன் கூட சிறிது தேங்காய்துருவல், இடித்த கருப்பட்டி சிறுது பால் தண்ணீர் கலந்து உருண்டைகளாக சாப்பிட சுவையாக இருக்கும். மருத்துவ குணம்: உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவு இது

கருத்துரையிடுக Disqus

 
Top