0

இந்த வசதியை மைக்ரோசாப்ட் இணைய பதிப்பு, டெஸ்க்டாப் பதிப்பு என்று இரண்டு வடிவங்களில் வெளியீட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, இணையம் என்று எல்லா இடங்களிலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ள முடியும். தமிழ் எழுதியை போன்றே நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடன் வருகிறது. இதனால் தமிழில் நாம் தட்டச்சு செய்யும் போது வரும் பிழைகளை தவிர்க்க இயலும்.



கூகிள் தமிழ் எழுதியை நிறுவியதை போன்றே இதனை நீங்கள் நிறுவ வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, புக்மார்க்லெட்டாக நிறுவி கொள்ள இங்கே சென்று வழிமுறைகளை பார்க்கவும். புக்மார்க்லெட்டாக இணைய உலாவிகளில் நிறுவி கொண்டால் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம். இதற்கு இணைய இணைப்பு தொடர்ச்சியாக அவசியம்.



இணைய இணைப்பு இன்றி கணினியில் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்து கொள்ள இதன் டெஸ்க்டாப் பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7லில் எப்படி நிறுவுவது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். படங்களுடன் புரியும்படி விளக்கி உள்ளனர்.



இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top