வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் இந்த வேப்பம் பூ மிகச் சிறந்த மருத்துவ
குணங்கள் நிறைந்தது. இதிலிருக்கும் மருத்துவ குணங்கள் தெரிந்தால் கசப்பை
மறந்து இதனை விரும்பி சாப்பிடுவாங்க

வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரியாகும் இதுபோல் சில குழந்தைகள் சாக்பீஸ், கல்குச்சி(பல்பம்) சாப்பிடும் குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.
இதனை நிழலில் காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க. இதனை ரசத்தில் சிறிது போட்டு செய்யலாம். மிளகு,சீரகம், வேப்பம்பூ இதனை எண்ணெயில் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து சாதத்துடன் சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் குறையும், பித்த வாந்தி நிற்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள்,கசடுகள் வெளியேரும், நீண்டநாள் காய்ச்சல் குணம் ஆகும், நரம்புகள் வலிமை பெரும். உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும். வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும். ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது.
அமெரிக்காவில் வேப்ப மரம் பற்றிய ஆராய்ச்சியில், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் பல வியாதிகளை வராமல் தடுக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர். வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.

கருத்துரையிடுக Facebook Disqus