எச்சரிக்கை: சுயநிதிக் கல்லூரிகள், நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும். கல்லூரியின் பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரம் ரத்து: அரசின் எச்சரிக்கையை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கவும், புகார்களின் மீது கல்லூரிகளில் சோதனை செய்யவும் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு சட்டப்படி அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கையின் போது,அதிகக் கட்டணம் கேட்கும் கல்லூரிகள் மீது மாநிலம் முழுவதும் புகார் அளிக்க வசதி இருந்தது.இந்த ஆண்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், குழுவிடம் மட்டும் தான் புகார் அளிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு பதில் அளித்து உயர்கல்வி முதன்மைச் செயலர் கே. கணேசன் கூறியதாவது:
அதிகக் கட்டணம், நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது ஆய்வுக் குழுவில் மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மாநிலம் முழுவதும் புகார் செய்யலாம். புகார் செய்ய கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் வசதி: இதன்படி, நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது தமிழகம் முழுவதும் புகார் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். பேக்ஸ் எண்கள் அடைப்புக் குறிக்குள்.
1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் -
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை: 044-22351018 (044 22201514)
2. ஈரோடு, கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல்-கோவை அரசு பொறியியல் கல்லூரி :0422-2432221/436 (0422-2455230)
3. சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்-சேலம் அரசு பொறியியல் கல்லூரி :0427-2346157/102 (0427-2346458)
4. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை,சிவகங்கை, நாகப்பட்டினம்-காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி:
04565-224535/225349 (04565-224528)
5. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், தேனி-திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி:
0462-2552448/50 (0462-2554012)
6. தர்மபுரி, கிருஷ்ணகிரி-பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி :
04343-266101/067 (04343-265875)
7. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்-தந்தை பெரியார் ஈ.வே.ரா.அரசு பொறியியல் கல்லூரி :
0416-2267498/762 (0416-2267498).
கருத்துரையிடுக Facebook Disqus