0
பசலைக் கீரை - இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.


முருங்கைக் கீரை - இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.


வல்லாரைக் கீரை -  அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.


காசினிக் கீரை – அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது.


துளசி இலை – விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சம் சாறோடு அரைத்து வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடங்களில் பூசினால் விஷம் நீங்கி குணம் ஏற்படும்.


அரைக்கீரை - நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும். பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல், தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை.


கொத்தமல்லித் தழை – இரத்த சுத்தி


முளைக் கீரை – நரம்புத் தளர்ச்சி


முள்ளங்கிக் கீரை – சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான்(சரும வியாதி)களை குணமாக்கும்.

தூதுவளைக் கீரை – இளைப்பு மற்றும் கக்குவானுக்கு

புதினாக் கீரை – இரத்த சுத்தி

வெந்தயக் கீரை
venthaya keerai (मेथी, Fenugreek leaves)
உடலுக்குக் குளிர்ச்சி; பசியைத் தூண்டும். தோலின் சொறி, சிரங்கு போகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை – மூல நோய்க்கு. மேலும் போன கண்னைக் கொண்டுவரும் பொன்னாங்கண்ணி என்றே சொலவடை உண்டு.

மணத்தக்காளிக் கீரை – B காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருப்பது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

முடக்கறுத்தான் கீரை (மொடக்கத்தான் கீரை) – பெயரிலேயே இருக்கிறது- முடக்கு வாதத்திற்கு மிகவும் நம்பக்கூடிய இயற்கை உணவு.

அகத்திக் கீரை – உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சி பெறும்.

கறிவேப்பிலை - பசி மிகும்; தலைமுடி நரைக்காது.

கோவை இலை, 

ஆமணக்கு இலை, 

கீழாநெல்லிக் கீரை, 

கரிசலாங்கண்ணிக் கீரை – மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து. ஈரலைச் சுத்தி செய்வதுடன் அஜீரணத்தைப் போக்கி பசியைப் பெருக்கும்.
வெயில் காலங்களில் அதிக அளவில் விதவிதமான கீரைகளை சாப்பாட்டில் பயன்படுத்தவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top