தூசு விழுந்த கண்ணைக் கசக்குவதோ, தேய்ப்பதோ கூடாது. கண்களை மூடி சில நிமிடம் இருந்தால் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வரும் பொழுது தூசியும் வெளிவந்துவிடும். 5நிமிடம் பிறகும் உறுத்தல் இருந்தால் கண் மருத்துவரை அனுகவும்.
கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்க வெள்ளரி துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்கள் மேல் வைத்து எடுக்கவும்.
கண்களில் அதிகமாக எரிச்சல் இருந்தால் கண்களை மூடிக்கொண்டு கண்களுக்கு மேல் சிறுது விளக்கெண்ணெயை ஊற்றி மெதுவாக மசாஜ் செய்யவும். கண்கள் பொலிவு பெரும்
கண்களின் இமைகளில் சுற்றி ஏற்படும் வென கட்டியை கரைக்க துளசி இலைசாற்றை பூசி வந்தால் கரைந்துவிடும்
கண்களை பாதுகாக்கும் உணவுகள்:
கண்கள் நல்ல அழகையும், ஒளியும் பெற வேண்டுமானால் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சுத்தமான தேனில் நனைத்து சாப்பிடவும்.
தினமும் பச்சையாக ஒரு கேரட் சாப்பிடவும்.
உணவில் பொன்னானங்கண்ணிகீரை அதிகமாக சேர்த்துக்கொண்டால் கண்கள் நன்றாக பிரகாசமாகவும் பளீச் சென்று இருக்கும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் பாதாம் பருப்பு சாப்பிட்டுவந்தால் கண்களில் இருந்து நீர் வடிவதைத் தடுக்கலாம்.
நாவல்பழம் சீஸனிலில் நாவலபழம் ஜூஸ் செய்து சாப்பிடுவது கண்களுக்கு நன்றாக ஒளிவு கிடைக்கும்.
கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் நீங்க வாழைப்பூ, வெள்ளரிக்காய் பச்சடி செய்து சாப்பிடலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
கண்களின் ஆரோக்கியத்துக்கு:
தினமும் காலை மாலையும் இடது, வலதுமாக பத்து பத்து முறை கண்களை சுழற்றவும்.
கண்களை வேகமாக மூடி திறப்பது நல்ல பயிற்சி. கண்களை நன்றாக அகல விரியுங்கள். இப்படி தினமும் பத்து முறை செய்யவும்.
வீட்டை சுற்றி பசுமையான மர இலைகள், செடிகள் இருநதால் தினமும் சில மணி துளிகள் அதனை கண்டு ரசியுங்கள்..
கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள். கண்களுக்கு போடும் கண்ணாடிமுதல் கண்களுக்கு போடும், மை, ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ விலை கம்மியான பொருட்களை கண்களுக்கு போடவேண்டாம்.
மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பயன்படுத்த கூடாது.
கருத்துரையிடுக Facebook Disqus