CMOS என்பதன் விரிவாக்கம் Complementary Metel Oxide Slicon ஆகும். கணினியின் தாய்ப் பலகையுடன் (Motherboard) காணப்படும் நினைவகக் கூறுகளில் ஒரு பகுதியாக அமைப்பு நினைவகத்தை கருதலாம். இந்த நினைவகமானது குறைந்தளவில் மின்வலுவை பயன்படுத்தும் CMOS சில்லுகளின் மூலமே உருவாக்கம் பெற்றுள்ளது. CMOS Chip இற்கு கணினியின் மின் இணைப்புடன் தொடர்பின்றி தொடர்ச்சியாக பற்றரி மூலம் மின்வலு வழங்கப்படும். இந்த மின்வலுவானது Motherboard இல் இணைக்கப்பட்டுள்ள சிறிய பற்றரி மூலம் வழங்கப்படும். CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படை தகவல்களான கணினியில் கணினியில் இணைக்கப்பட்டுள்ள வன்தட்டுக்களின்(Hard Disk) வகை, எண்ணிக்கை, நினைவக அளவு(Memory Size), நினைவக அமைப்பு, கணினியின் நேரம், திகதி மற்றும் வன்பொருள் அமைப்புக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்திருக்கும். இந்த Settings ஐ கைமுறையாகவோ (Manual) அல்லது தன்னியக்கமாகவோ மாற்றமுறச் செய்ய முடியும். CMOS தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும்Chipகள் மின் வலுவை மிகவும் வினைத்திறனாக குறைந்தளவில் பாவிப்பது மிகப் பெரிய அனுகூலமாகும். கணினிகள்
உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இந்தத் தொழில்நுட்பம் அதிகளவில்
பயன்படுத்தப்படவில்லை.இதற்கு இத் தொழில்நுட்பம் அப்போதைய நிலையில் மிகவும்
உயர் செலவுடையதாக காணப்பட்டதே காரணமாகும்.பின்னர் IBM நிறுவனத்தால் இது எல்லா கணினிகளிலும் சேர்க்கப்பட்டது.CMOS Chip மற்றும் அதனோடு இணைந்த பற்றரி ஆகிய இரண்டையும் சேர்த்து "PC's CMOS" என அழைக்கப்பட்டது.
Motherboard இல் மூன்று சிறிய CMOS Setting இற்குரிய இணைப்புக் கம்பிகள் உள்ளது. அதில் இரண்டு சாதாரண வேளையில் தொடுக்கப்பட்டு இருக்கும். CMOS Setting மாற்றவேண்டிய தேவை ஏற்படும்போது முதலில் பற்றரியைக் கழற்றிய பின்னர்
அத் தொடுப்பை அகற்றி மற்றைய இரு கம்பிகளுடன் தொடுப்பை ஏற்படுத்தி Power Button ஐ அழுத்தி 5 செக்கன்கள்
வரை வைத்திருந்து மீண்டும் மின்னை துண்டித்தபின்னர் மீண்டும் பழைய
கம்பிகளுடன் தொடுப்பை ஏற்படுத்தி மீண்டும் கணணியை இயக்க வேண்டியது தான்.
இப்போ CMOS Setting மாறியிருக்கும்.
CMOS Setting ஐ மாற்றக் கூடியபோதும், முயற்சி செய்கின்றபோது மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிலவேளைகளில் Motherboard ஐ குப்பைத் தொட்டிக்குள் போடவேண்டிய நிலையும் ஏற்படலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus