இருட்டில்
மற்றவர்களுக்குத் தொல்லை தராமல், பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் கீ
போர்டினை, லாஜிடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு அந்த நிறுவனம்
வைத்துள்ள பெயர், K 800. பின்புறத்திலிருந்து வெளிச்சம் தரும் வகையில் இந்த
கீ போர்டு நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறையின்
ஒளிக்கேற்ற வகையில் இதன் ஒளி மாறும் தன்மையுடையது. கைகள் இதன் அருகே
செல்கையில், ஒளிர்ந்து மற்ற நேரத்தில் ஒளிராமல் இந்த விளக்குகள்
இயங்குகின்றன. இந்த விளக்கிற்கான மின்சக்தி, கம்ப்யூட்டருடன்
இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் கிடைக்கிறது. இதில் உள்ள பேட்டரி ரீசார்ஜ்
செய்யப்படுகிறது.
இந்த
கீ போர்டின் வடிவம் மிகவும் ஸ்லிம்மாக உள்ளது. யு.எஸ்.பி. போர்ட்டில்
இணைத்து இதனைப் பயன்படுத்தலாம். மின்னஞ்சல், இணைய உலா மற்றும் மல்டி மீடியா
பயன்பாடுகளுக்கென தனி கீகள் தரப்பட்டுள்ளன. இது மேலும் சிறப்பாகும்.
விண்டோஸ் 7, விஸ்டா மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களுடன் இணைந்து இது
இயங்குகிறது. இதன் நான்கு புறங்களிலும் பிளாஸ்டிக்கினால் ஆன பார்டர்
தரப்பட்டுள்ளது. 9.3 மிமீ மட்டுமே இதன் இதன் தடிமன் ஆகும்.
ஒவ்வொரு பட்டனிலும் மைக்ரோ லென்ஸ் ரெப்ளக்டர் உள்ளது. இதனால் மிக அழகான நீல நிற ஒளியுடன் இதன் கீகள் ஒளிர்கிறது.
இதனை
யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். எந்தவிதமான
இன்ஸ்டலேஷனும் தேவையில்லை. ஆனால் இதன் மேலாகத் தரப்பட்டுள்ள 12 ஸ்பெஷல்
கீகளுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள, இதனுடன் வரும் 4.6 கேபி அளவுள்ள
இன்ஸ்டலேஷன் பைலை இயக்கிப் பதிய வேண்டும்.
ஒவ்வொரு கீக்கும் இடையே 3.2 மிமீ இடைவெளி உள்ளது. இது கைகளுக்கு மிக லாவகமான முறையில் டைப் செய்த உதவியாக இருக்கிறது.
இந்த
கீ போர்டில் யு.எஸ்.பி. போர்ட் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால்
நேரடியாக கீ போர்டில் எந்தவிதமான பென் ட்ரைவினையும் இணைக்க முடியாது.
ஒருவேளை இதனை ஸ்லிம்மாக வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை
விட்டிருக்கலாம். இந்த கீ போர்டு வயர் மூலம் இணைத்துச் செயல்படும் மாடலாக
மட்டுமே வந்துள்ளது. வயர் வழி இணைப்பின்றி இதனைப் பயன்படுத்த முடியாது.
இரவு நேரத்தில் சத்தமில்லாது கம்ப்யூட்டர் மூலம் பயன்பாடு அடைபவர்களுக்கு
இது ஒரு வரப்பிரசாதம்.
கருத்துரையிடுக Facebook Disqus