0

Flash flip book எப்படி என Demo பார்க்க http://pageflip.hu/demo_simple.html

அதைப் பகிர்ந்துகொள்லலாமே என எண்ணுகிறேன். அனைத்தும் இலவசமாகக் கிடைக்கிறது.
சில இலகுவாகவும் ஆனால் சாதாரண பக்கங்கள் புரட்டுவதோடு நின்றுவிடுகின்றன
சில சற்று கூடிய முயற்சியில் மிக அழகாக அனிமேஷன்களுடன் உயர்தரத்தில் காணப்படுகின்றன.
அவற்றை பகிர்ந்து கொண்டால் மற்ரவர்களுக்கும் பிரயோசனப்படலாம் என நினைக்கிறேன்
இதில் எந்த Water mark அல்லது Demo என்னும் முத்திரைகள் இல்லை.
முதலில் இலகுவானவை.

1. Openoffice flip book creator.

இது Open Office /writter (http://www.openoffice.org/) கொண்டு உருவாக்கும் documents ஆன *.odt;*.odp;*.ods;*.odg;*.odb போன்ற வகையில் save செய்யும்
பக்கங்களை Flash Flip books ஆக்கித்தருகிறது. இந்த மென்பொருள் எத்தனை நாட்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தெரியாதபடியால்
உடன் தரவிறக்கிக் கொள்ளுங்கள். ஆனால் தகுந்த antivirus போன்றவற்றால் பரிசோதிப்பது தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைச் சார்ந்தது

http://www.winsite.com/Audio/MP3-Search-Tools/Free-OpenOffice-to-FlipBook/

இங்கே கவனிக்க வேண்டியது. மேற்கூறிய Documents சேமிக்கப்படும் வகைகள் *.odt;*.odp;*.ods;*.odg;*.odb போன்றன ஆகும் . இம்வகைகள் unicode முறையை ஏற்றுக்கொள்ளாது என்பதால் Ansi முறையிலேயே (encoding) சேமிக்கப்படும். அதனால் மீண்டும் திறக்கும்போது புரியாத விதமாக ஏதோ வகையில் மாறிக் காணப்படும். நாங்கள் Flip book ஆக மாற்றும்போதும் இப்படியேதான் காணப்படும்

அதனால் இந்தவழிமுறையைக் கையாளவேண்டும்.

NHM Converter போன்ற ஒரு Converter மூலமாக (http://software.nhm.in/products/writer) முழு கவிதை ஆக்கங்களையும் TSCI, TAM,TAB, BAMINI இவ்வகையிலான ஒரு எழுத்துருவுக்கு
இலகுவாக மாற்றிக்கொண்டு open office writer ல் அதே எழுத்தை கொண்ட document உருவாக்கிய நிலையில் (converter ஆல் பிரதி பண்ணி ஒட்டும்போது புரியாத எழுத்தாயிருக்கும். ஒட்டியதும் தமிழ் எழுத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள்) சேமித்துவிட்டு மேற்கூறிய Flip book செய்யும் Program கொண்டு மின்னூல் செய்து கொண்டால் மிக அழகான Flip book தயாராகி விடுகிறது. விரும்பிய படங்களும் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு இலவச மென்பொருள் போட்டோக்களுக்கு
http://www.winsite.com/Audio/MP3-Search-Tools/Free-Photo-to-Flash-Flip-Book/

தாங்கள் இதில் விரும்பிக் கருத்துக்கள் தந்தால் தொடர்ந்து சில சிக்கலான முறையில் Professional ஆன Flip book செய்யும் முறை தருகிறேன்.

TSCI, TAB, TAM எழுத்துருக்கள் (Fonts) பெறுவதற்கு

http://azhagi.com/freefonts.html
அல்லது
http://www.barathonline.com/blog/downloads/
(Non-Unicode எழுத்துக்கள்)

கருத்துரையிடுக Disqus

 
Top