0


ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இவரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்தளவிற்கு போலீஸ் குற்றத்தடுப்பு குறித்த "அறிவிப்பால்' மிகவும் பிரபலமானவர், மூர்த்தி. 62 வயதான இவர், கடந்த 48 ஆண்டுகளாக, போலீசுக்கு பக்கபலமாக பணியாற்றுவது தான் "ஹைலைட்டான' விஷயம்.

கோயில் திருவிழாக்களில், "காதுல இருக்கிற நகை, கழுத்தில் இருக்கிற நகை, இடுப்பில் இருக்கிற குழந்தை... பத்திரம்' என்று அறிவித்து மக்களை எச்சரித்து வருகிறார். இப்பணியையும் இலவசமாக செய்து வருவது இவருக்கு விருப்பமானது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, தெலுங்கு, கன்னட மொழிகளில் அறிவிப்பு செய்வது தான் இவரது "ஸ்பெஷாலிட்டி'.

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் மூர்த்தி. வாலிப வயதில் குரல் வளம் நன்றாக இருந்ததால், 1964ல் இன்ஸ்பெக்டர் சொர்ணமூர்த்தி அய்யர் தான், முதன் முதலில் "மைக்'கில் பேச வைத்தார். இன்று வரை போலீஸ் ஜீப்பில் அறிவிப்பை தொடர்ந்து வருகிறேன்.

48 ஆண்டுகால அனுபவத்தில், கோயில் விழா கூட்டங்களில் தொலைந்து போன 40 ஆயிரம் குழந்தைகளை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளேன். கீழே கிடந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளேன். 32 எஸ்.பி., க்களிடம் வாழ்த்து பெற்றுள்ளேன்.

அறிவிப்புக்கு தேவையான மைக், ஆம்ளிபயர் உபகரணங்கள் கூட, எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான் என்றார்.

இவருக்கு வாழ்த்துச் சொல்ல 97502 59087ல் ஹலோ சொல்லலாம்...

கருத்துரையிடுக Disqus

 
Top